நார்வே செஸ் போட்டி: மேக்னஸ் கார்ல்சனிடம் இந்திய வீரர் குகேஷ் தோல்வி

0
20

நார்வே செஸ் போட்​டி​யின் 4-வது சுற்​றில் நார்வே வீரர் மேக்​னஸ் கார்ல்​சனிடம் இந்​திய வீரரும் உலக சாம்​பியனு​மான டி.குகேஷ் தோல்வி கண்​டார்.

நார்வே தலைநகர் ஓஸ்​லோ​வில் நார்வே செஸ் போட்டி நடைபெற்று வரு​கிறது. நேற்று 4-வது சுற்​றுப் போட்​டிகள் நடைபெற்றன. இந்​தப் போட்​டி​யில் முன்​னாள் உலக சாம்​பியன் மேக்னஸ் கார்ல்சனும், நடப்பு உலக சாம்​பியனும் இந்​திய வீரருமான டி. குகேஷும் மோதினர். குகேஷ் வெள்ளை நிறக்காய்களு​ட​னும், மேக்​னஸ் கார்ல்​சன் கருப்பு நிற காய்களுடனும் விளை​யாடினர். இதில் சிறப்​பாக விளை​யாடிய மேக்னஸ் கார்ல்சன் 42-வது நகர்த்​தலின்​போது வெற்றி பெற்​றார். கார்ல்​சன் தற்​போது 4.5 புள்​ளி​களு​டன் உள்​ளார்.

மற்​றொரு 4-வது சுற்​றுப் போட்​டி​யில் இந்​திய வீரர் ஆர்.பிரக்ஞானந்தா சிறப்​பாக விளை​யாடி ஜெர்​மனி வீரர் வின்சென்ட் கீமெரை வீழ்த்​தி​னார். அமெரிக்க வீரர் வெஸ்லி சோ அபார​மாக தனது ஆட்​டத்தை வெளிப்​படுத்தி பிரான்ஸ் வீரர் அலிரேசா பிரோஸ்​ஜாவை தோற்​கடித்​தார்.

4-வது சுற்​றின் முடி​வில் அலிரேசா 8.5 புள்​ளி​களு​டன் முதலிடத்​தில் உள்​ளார். அதற்​கடுத்த இடத்தில் இந்​திய கிராண்ட்​மாஸ்​டர் ஆர்.பிரக்​ஞானந்தா 6 புள்​ளி​களு​டன் உள்​ளார். அமெரிக்க வீரர் வெஸ்லி சோ 5.5 புள்​ளி​களை​யும், மேக்​னஸ் கார்ல்​சன் 4.5 புள்ளிகளை​யும், வின்​சென்ட் கீமர் 4 புள்​ளி​களை​யும், குகேஷ் 3.5 புள்ளி​களை​யும்​ பெற்​றுள்​ளனர்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here