சென்னை டெஸ்ட்: ஃபாலோ ஆன் பெற்றது தென் ஆப்பிரிக்க அணி

0
65

இந்திய மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி ஃபாலோ ஆன் பெற்றது.

சென்னையில் இந்த டெஸ்ட் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதலில் விளையாடிய இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 603 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 2-ம் நாள் ஆட்டநேர இறுதியில் 4 விக்கெட் இழப்புக்கு 236 ரன் எடுத்திருந்தது. நேற்று நடைபெற்ற 3-ம் நாள் ஆட்டத்தில் அந்த அணி 266 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து ஃபாலோ ஆன் பெற்ற அந்த அணி 2-வது இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடியது.

3-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 232 ரன்கள் எடுத்திருந்தது. அன்னேக்கே போஷ் 9, சுனே லுஸ் 109 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் லாரா வோல்வார்ட் 93 ரன்களும், மரிஜான் காப் 15 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.