விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் செர்பியாவின் நோவக்ஜோகோவிச் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
லண்டனில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் 10-வது நாளான நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் 2-ம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 9-ம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாருடன் மோத இருந்தார். ஆனால் போட்டி தொடங்குவதற்கு ஒரு சில மணி நேரத்துக்கு முன்னதாக காயம் காரணமாக இந்த ஆட்டத்தில்...
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்துவிளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில் முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வே 13ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. தொடர்ந்து 2-வது ஆட்டத்தில் 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி பதிலடி கொடுத்தது. இதனால் தொடர் 1-1 என சமநிலையை அடைந்தது. இந்நிலையில் இரு அணிகளும் 3-வது ஆட்டத்தில்...
மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற்ற டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பரிசுகளும், பாராட்டுகளும் குவிந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் இந்திய அணியில் இடம் பெற்றிருந்த ஹைதராபாத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் வீரர் முகமது சிராஜ் நேற்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது அவருக்கு,...
இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலி, மகாராஷ்டிராவின் கடற்கரை நகரமான அலிபாக் நகரத்தில் சொகுசு வீடு கட்டியுள்ளார். இதன் பிரத்யேக வீடியோ காட்சியை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதோடு இந்த வீடு குறித்தும் அவர் சிலாகித்து பேசியுள்ளார். இது வைரலாகி உள்ளது.
அண்மையில் நடந்து முடிந்த ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் சிறப்பாக பேட் செய்து ஆட்ட நாயகன் விருதை வென்றிருந்தார். கோப்பை வென்று...
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பதில் பெருமை கொள்வதாக கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில், “இந்தியா என் அடையாளம். தேசத்துக்காக சேவை செய்வது என் வாழ்நாளின் பாக்கியமாக கருதுகிறேன். மீண்டும் அணியில் இணைந்ததை கவுரவமாக கருதுகிறேன். என்ன இந்த முறை எனக்கு வேறு பொறுப்பு. ஆனால், எப்போதும் போல எனது இலக்கு ஒன்று தான். அது ஒவ்வொரு இந்தியரையும்...
ஒலிம்பிக்கில் இம்முறை இந்தியா இரட்டை இலக்கத்தில் பதக்கம் வெல்லும்: தேசிய கொடியை ஏந்திச் செல்லும் சரத் கமல் நம்பிக்கை
admin - 0
பாரிஸ் ஒலிம்பிக்கில் இம்முறை இந்தியா இரட்டை இலக்கத்தில் பதக்கம் வெல்லும் என தேசிய கொடியை ஏந்திச் செல்ல உள்ள இந்திய டேபிள் டென்னிஸ் நட்சத்திரம் சரத் கமல் தெரிவித்தார்.
மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் வரும் 26-ம்தேதி பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் கோலாகலமாக தொடங்குகிறது. ஆகஸ்ட் 11-ம் தேதி வரைநடைபெறும் இந்தத் திருவிழாவின் தொடக்க நாளில் தேசிய கொடியை 4 முறை ஒலிம்பிக்கில் பங்கேற்ற டேபிள் டென்னிஸ் நட்சத்திர வீரரான...
பிரபல WWE மல்யுத்த வீரரும் நடிகருமான ஜான் சீனா தன்னுடைய ஓய்வை அறிவித்துள்ளார். 2025ஆம் ஆண்டு நடக்கவுள்ள ரஸ்ஸல்மேனியா 41 போட்டிதான் தான் கலந்துகொள்ளும் கடைசி போட்டி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கனடாவின் டொரான்டோ நகரில் இன்று (ஜூலை 7) நடைபெற்ற ‘மனி இன் தி பேங்க்’ மல்யுத்த போட்டியின்போது சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்த ஜான் சீனா தன்னுடைய ஓய்வை அறிவித்தார்.
ஜான் சீனா மைக்கை எடுத்து பேசத் தொடங்கியபோது ரசிகர்கள்...
ஜிம்பாப்வே அணிக்கெதிரான 2-வது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய அணி, ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் போட்டியில் ஜிம்பாப்வே வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் 2-வது டி20 ஆட்டம் நேற்று ஹராரே மைதானத்தில் நடைபெற்றது.
முதலில்...
சென்னையில் தமிழ்நாடு கிரிக்கெட் மூத்தோர் சங்கம் சார்பில் 50 பிளஸ் வயதினருக்கான டி.எஸ்.மகாலிங்கம் டிராபி டி20 கிரிக்கெட் தொடர் வரும் 13-ம் தேதி முதல் நடைபெற உள்ளது.
இந்தத் தொடர் ஜூலை 28-ம் தேதி வரை சென்னை தாம்பரத்தில் உள்ள ரெட்டி சுமங்கலி டர்ஃப் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் விசிஏ, எம்சிசி, ஐஎன்எஸ்சி, ஐஎஃப்சிஆர், ஜிஎன்எஸ்சி, கோவை, சிடிசிஏ, எம்ஜிசி, எம்ஆர்சி, காஸ்மோ பாலிட்டன் ஆகிய 10 அணிகள்...
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடர் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியில் இந்திய அணியை ரோகித் சர்மா வழிநடத்துவார் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் கேப்டனாக ரோகித் செயல்படுவார் என்பதை அவர் உறுதி செய்துள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் ரோகித்...










