சிராஜுக்கு அரசு வேலை, ஹைதராபாத்தில் வீடு: தெலங்கானா முதல்வர் அறிவிப்பு

0
119

மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற்ற டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பரிசுகளும், பாராட்டுகளும் குவிந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் இந்திய அணியில் இடம் பெற்றிருந்த ஹைதராபாத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் வீரர் முகமது சிராஜ் நேற்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது அவருக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் சீருடையை வழங்கினார். இதைத் தொடர்ந்து முகமது சிராஜுக்கு, தெலங்கானா மாநில அரசு பணி மற்றும் ஹைதராபாத்தில் வீடு ஒன்றையும் வழங்க அதிகாரிகளுக்கு முதல்வர் ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டார்.