விராட் கோலியின் அலிபாக் ‘ஹோம் டூர்’ – வீடியோ வைரல்

0
86

இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலி, மகாராஷ்டிராவின் கடற்கரை நகரமான அலிபாக் நகரத்தில் சொகுசு வீடு கட்டியுள்ளார். இதன் பிரத்யேக வீடியோ காட்சியை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதோடு இந்த வீடு குறித்தும் அவர் சிலாகித்து பேசியுள்ளார். இது வைரலாகி உள்ளது.

அண்மையில் நடந்து முடிந்த ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் சிறப்பாக பேட் செய்து ஆட்ட நாயகன் விருதை வென்றிருந்தார். கோப்பை வென்று கையோடு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்தார். இந்திய அணிக்கான பாராட்டு விழா முடிந்ததும் வெளிநாடு சென்றுள்ளார்.

இந்த சூழலில் அலிபாக் வீட்டின் வீடியோ காட்சிகளை அவர் பகிர்ந்துள்ளார். இதில் வீட்டின் உட்புறம், வெளிப்புறம் என அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அலிபாக், மும்பைக்கு தெற்கு பகுதியில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

“எங்களது அலிபாக் வீட்டைக் கட்டிய இந்த பயணம் உன்னதமானதாக இருந்தது. அனைத்து பணிகளும் முழுமை பெறுள்ளதை பார்க்கையில் மகிழ்ச்சியாக உள்ளது. எங்கள் கனவு இல்லத்துக்கு உயிர் கொடுத்த அவாஸ் குழுவுக்கு மிகப்பெரிய நன்றி. பிரியமானவர்களுடன் இணைந்து இங்கு ஒவ்வொரு தருணத்தையும் அனுபவிக்க உள்ளேன்” என இந்த வீடியோவுக்கு கேப்ஷன் கொடுத்துள்ளார் கோலி.

கடந்த ஆண்டு பிப்ரவரியில் இந்த சொகுசு இல்லத்தின் கட்டுமான பணி தொடங்கியுள்ளது. டைம்லைன் பாணியில் இந்த வீடியோவில் வீட்டின் அஸ்திவார பணி முதல் அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கட்டுமானப் பணி தொடங்கியுள்ளது. அவ்வப்போது பணிகளை கோலியும் நேரில் சென்று பார்த்துள்ளார்.

“இந்த திட்டம் குறித்து நான் அறிந்த போது அது தனித்துவமானது என்பது புரிந்தது. இங்கு பிரைவசி கிடைக்கிறது. அதே நேரத்தில் ஹாலிடே வீட்டுக்கு தேவையான அத்தனை அம்சங்களும் இங்கு நிறைந்துள்ளது. நான் எதிர்பார்க்கிற அனைத்தும் இங்கு உள்ளது.

எனக்கு இதில் லிவிங் ஸ்பேஸ் மிகவும் பிடித்துள்ளது. அங்கிருந்து அவுட்டோர் செல்வதற்கான அக்சஸும் எனக்கு பிடித்துள்ளது. அழகியல் சார்ந்து வீட்டின் அமைப்பு உள்ளது. நான் எதிர்பார்ப்பது போலவே இயற்கை ஒளி வீட்டின் உள்ளே வருகிறது. இங்கு எது குறித்தும் கவலை கொள்ளாமல் வசிக்கலாம்” என அந்த வீடியோவில் கோலி பேசியுள்ளார்.