Google search engine
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்பைக் கண்டித்தும், தமிழக அரசுக்கு எதிராகவும் ஜூன் 22-ம் தேதி மதுரை ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டம் நடத்த காவல் துறையிடம் பாஜக சார்பில் அனுமதி கோரப்பட்டது. ஆனால், காவல் துறை அனுமதி அளிக்கவில்லை. எனினும், திட்டமிட்டபடி கடந்த22-ம் தேதி மதுரை ஆட்சியர் அலுவலகம் அருகே பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா உள்ளிட்ட கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்த திரண்டனர். அப்போது,போலீஸாருக்கும், கட்சியினருக்குமிடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது....
நெருக்கடிநிலை கால போராட்ட வீரர்கள் சங்கம் சார்பில் காங்கிரஸ் ஆட்சியில் அவசரநிலை பிரகடனம் குறித்த கருப்பு தின நினைவுக் கூட்டம் சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது: நாட்டில் 1975 ஜூன் 25-ம் தேதி அவசரநிலை பிரகடனம் (எமர்ஜென்சி) அமலானது. எமர்ஜென்சியின் போது 21.14 லட்சம் பேர் கைது செய்யப்பட்டனர். பல்வேறு அடக்குமுறைகளுக்கு மக்கள் உள்ளாகினர். இந்த...
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேடு கருணாபுரத்தை சேர்ந்த சிலர் கடந்த 18, 19-ம் தேதிகளில் மெத்தனால் கலந்த கள்ளச் சாராயம் குடித்துள்ளனர். இதில் உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று வரை கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைகள், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மொத்தம் 220 பேர் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது....
தமிழகத்தில் வரும் 2 ஆண்டுகளில், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் ரூ.4 ஆயிரம் கோடியில் 10 ஆயிரம் கி.மீ. சாலைகள் மேம்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதுகுறித்து சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறாம். அனைத்து துறை வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி என்பதையே திராவிட மாடல் அரசின்...
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவம் தொடர்பாக மேலும் ஏழு பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் இதுவரையில் 21 நபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். சடையன், தேவபாண்டலம், சிவகுமார்,சென்னை, பன்சிலால்,சென்னை, கௌதம்,சென்னை,ரவி, தேவபாண்டலம், செந்தில், சேஷ சமுத்திரம், ஏழுமலை, மல்லிகைப்பாடி ஆகிய ஏழு பேரையும் சிபிசிஐடி போலீஸார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் கள்ளச் சாராயம் அருந்தி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 59 ஆக...
சட்டப்பேரவையில் நேற்று பள்ளிக்கல்வி, உயர்கல்வி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. அப்போது, அமைச்சரும், அவை முன்னவருமான துரைமுருகன் பேசியதாவது: அரை நூற்றாண்டுகளாக இந்த அவையில் இருக்கிறேன். இந்த மன்றத்தின் கண்ணியம், கட்டுப்பாடு கொஞ்சம், கொஞ்சமாக மாறி வருவதை பார்க்கும்போது வருத்தமாக உள்ளது. பொதுக்கூட்டத்தில் பேசுவது வேறு, சட்டப்பேரவையில் பேசுவது வேறு. சட்டப்பேரவையை பொதுக்கூட்டமாக ஆக்கிவிடக்கூடாது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, அமைச்சர்கள் என எல்லோருக்கும்...
இந்த கல்வியாண்டு முதல் கலை - அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 20 சதவீதம் வரை அதிகரிக்கப்படுகிறது என்று சட்டப் பேரவையில் உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று உயர்கல்வித் துறையின் அறிவிப்புகளை அத்துறையின் அமைச்சர் க.பொன்முடி வெளியிட்டார். அதில், 2025-26-ம் கல்வியாண்டு முதல் அச்சு தொழில்நுட்பம் பயிலகத்தில் பொதிகட்டுதல், தோல்தொழில்நுட்ப பயிலகத்தில் காலணி, தோல் மற்றும் அலங்காரம், நெசவு தொழில்நுட்ப பயிலகத்தில் அலங்காரம், ஆடை,...
தமிழ் மொழிக்கு தொண்டு செய்வோருக்கு கருணாநிதி பெயரில் ரூ.10 லட்சம், ஒரு பவுன் தங்கப் பதக்கத்துடன் புதிய விருது வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை தொடர்பாக அத்துறையின் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பதிலளித்துப் பேசும்போது அவர் வெளியிட்ட அறிவிப்புகள்: பிற மொழி திணிப்பால் தமிழுக்கு வந்த ஆபத்தை எதிர்த்து தங்கள் இன்னுயிரை ஈந்த மொழிபோர் தியாகிகளை போற்றும் வண்ணம் 2025-ம்...
போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை வலியுறுத்தி தமி ழகம் முழுவதும் 100 இடங்களில் சிஐடியு சங்கத்தினர் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன (சிஐடியு) நிர்வாகிகள் கூறியதாவது: தமிழக மக்களுக்கு போக்கு வரத்து சேவையை அளிக்கும் போக்குவரத்துக் கழகங்கள் மிகச்சிறந்த பொதுத்துறை நிறுவனமாகும். இக்கழகங்கள் சேவைத்துறையாக செயல்படுவதால் கடும் இழப்பை சந்திக்கின்றன. எனவே, போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசு உடனடியாக வழங்க...
தமிழகத்தில் மக்காச்சோள சாகுபடியை ஊக்குவிக்க 18 மாவட்டங்களில் ரூ.30 கோடியில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றுஅமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில், வேளாண்துறை மானியக் கோரிக்கை மீதானவிவாத்ததுக்கு பதிலளித்து அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள்: தமிழகத்தில் மக்காச்சோள சாகுபடியை ஊக்குவிப்பதற்கான சிறப்புத்திட்டம் சேலம், திருப்பூர், திண்டுக்கல், திருச்சி, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் ரூ.30 கோடியில் செயல்படுத்தப்படும். உயர் தொழில்நுட்ப சாகுபடியை விவசாயிகளிடம் ஊக்குவித்து உற்பத்தியை பெருக்க ரூ.10.19 கோடி மானியத்தில் பசுமைக்...