“பேரவையை பொதுக்கூட்டமாக ஆக்கிவிடக் கூடாது” – அமைச்சர் துரைமுருகன் வேண்டுகோள்

0
223

சட்டப்பேரவையில் நேற்று பள்ளிக்கல்வி, உயர்கல்வி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. அப்போது, அமைச்சரும், அவை முன்னவருமான துரைமுருகன் பேசியதாவது:

அரை நூற்றாண்டுகளாக இந்த அவையில் இருக்கிறேன். இந்த மன்றத்தின் கண்ணியம், கட்டுப்பாடு கொஞ்சம், கொஞ்சமாக மாறி வருவதை பார்க்கும்போது வருத்தமாக உள்ளது. பொதுக்கூட்டத்தில் பேசுவது வேறு, சட்டப்பேரவையில் பேசுவது வேறு. சட்டப்பேரவையை பொதுக்கூட்டமாக ஆக்கிவிடக்கூடாது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, அமைச்சர்கள் என எல்லோருக்கும் இது பொருந்தும். பேரவைத் தலைவர் கண்டிப்புடன் இருக்க வேண்டும் என்றார்.

இதற்கு பதிலளித்த பேரவைத் தலைவர் அப்பாவு, ‘‘அவை முன்னவரின் ஆலோசனை நிச்சயமாக நடைமுறைப்படுத்தப்படும்’’ என்றார்.