Google search engine
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 3 குற்றவியல் சட்டங்களை திரும்ப பெறக்கோரி உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் நேற்றுநீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பாஜக வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இந்திய தண்டனை சட்டம், குற்ற விசாரணை முறை சட்டம் மற்றும் இந்திய சாட்சிய சட்டம் ஆகிய சட்டங்களுக்கு பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக் ஷிய‌ அதிநியம் என்ற பெயர்களில் மூன்று புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு கடந்த...
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த மனு மீதான உத்தரவை தள்ளி வைக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மூன்று புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அதில், நீதிமன்ற உத்தரவுப்படி வழங்கப்பட்ட வங்கி ஆவணங்களில் வேறுபாடுகள் உள்ளதால் விடுபட்ட ஆவணங்களை வழங்கவும், கரூர் சிட்டி யூனியன் வங்கியில் உள்ள கவரிங் லெட்டர் தொடர்பான ஆவணங்களை வழங்க உத்தரவிட வேண்டும்...
ரயில்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் கல்லூரி மாணவர்கள் தொடர் வன்முறையில் ஈடுபட்டால், 2 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று சென்னை ரயில்வே காவல் துறை டிஎஸ்பி ரமேஷ் எச்சரித்துள்ளார். செங்கல்பட்டு, திருவள்ளூர், அரக்கோணம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு மின்சார ரயில்களில் கல்லூரி மாணவர்கள் வந்து செல்கின்றனர். வெவ்வேறு கல்லூரிகளில் படிக்கும் இந்த மாணவர்கள் இடையே ‘ரூட் தல’ விவகாரத்தில் அவ்வப்போது மோதல்...
கேரளாவில் அமீபா நுண்ணுயிரியால் மூளையழற்சி பாதிப்பு பரவி வருவதால் தமிழகத்தில் ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளில் யாரும் குளிக்க வேண்டாம் என்று தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார். கேரள மாநிலத்தில் அமீபா நுண்ணுயிரியால் ஏற்படும் மூளையழற்சி பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. இதுவரை அந்நோய் பாதிப்புக்கு மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். அசுத்தமான தண்ணீரில் உள்ள அமீபா மூலம் உருவாகும் என்சபலிட்டிஸ் எனப்படும் மூளையழற்சி பாதிப்பு ஏற்படுகிறது. சுகாதாரமற்ற...
அம்ரித் பாரத் நிலையம் திட்டத்தின் கீழ், சென்னை கிண்டி ரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. தற்போது வரை, 50 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ‘அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டம்’ என்ற திட்டத்தின் கீழ், தெற்கு ரயில்வேயில் 116 நிலையங்கள் மேம்படுத்த அடையாளம் காணப் பட்டுள்ளன. இவற்றில், சென்னை ரயில்வே கோட்டத்தில் 17 ரயில்நிலையங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிலும், சென்னை கடற்கரை -...
கஸ்தூரிபா நகர் குடியிருப்போர் நலசங்கம் சார்பில் வரும் ஜூலை 13, 14 தேதிகளில் அடையார், திருவான்மியூர், வேளச்சேரி ஆகிய இடங்களில் பழைய பொருட்கள் சேகரிப்பு முகாம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக அச்சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொதுமக்கள் பலர் தங்கள் வீடுகளில் தேவையற்ற பழையபொருட்களை என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டிலேயே வைத்திருக்கின்றனர். இவர்களுக்கு தேவையற்ற பொருள், மற்றவர்களுக்கு பயனுள்ள பொருளாக உள்ளன. அதனால் பழைய பொருட்களை, தேவையானவர்களிடம் பெற்று,...
ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூர், பந்தர் கார்டன் தெருவில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி சென்னை மாநகராட்சி ஆணையருக்கு ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி(50) நேற்று முன்தினம் மனு கொடுத்தார். அந்தமனு பரிசீலிக்கப்படாததால், சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் அவசர வழக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கு நேற்று காலை 9 மணிக்கு நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்...
ஊரகப்பகுதிகளில் 100 நாள் வேலை திட்டம் பாதிக்கும் என்பதால் நகர்ப்புற உள்ளாட்சிகளோடு ஊராட்சிகளை இணைக்கவும் தற்போது பதவியில் உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் பறிபோகும் என்பதால் உள்ளாட்சி தேர்தலை முன்கூட்டியே நடத்தவும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழகத்தில் உள்ள 6 வகையான உள்ளாட்சி அமைப்புகளுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. மாநில தேர்தல் ஆணையம் இந்த தேர்தல்களை நடத்துகிறது. தற்போது பதவியில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில், 2019-ம் ஆண்டு அதிமுக...
தமிழக அரசின் சார்பில், பொது விநியோகத்திட்ட பொருட்களான அரிசி, சர்க்கரை, கோதுமை தவிர, சிறப்பு பொது விநியோக திட்டத்தின் கீழ் மானிய விலையில் ஒரு கிலோ துவரம் பருப்பு, பாமாயில் வழங்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த மே மாதம் முதல் இப்பொருட்கள் கிடைப்பதில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. மாதாமாதம் தேவைப்படும் அளவு பொருட்கள் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து பெறப்பட்டு, கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு கடைகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த மே மாதம்...
கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் என்னும் அதிகதொகையை எப்படி இழப்பீடாக வழங்க முடியும் என சென்னைஉயர் நீதிமன்றம் கேள்விஎழுப்பியுள்ளது. கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கடந்த ஜூன் 18, 19-ம் தேதிகளில்கள்ளச் சாராயம் குடித்து 65 பேர்உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் பெரும்பாலானோருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அரசின்...