Google search engine
ராகுலின் இந்திய ஒற்றுமை நியாயயாத்திரை உ.பி.யின் மொரதாபாத்தில் இருந்து சம்பல் வழியாக : நேற்று அலிகார் வந்தடைந்தது. ராகுல் காந்தியை வரவேற்க ஏராளமான தொண்டர்கள் குவிந்திருந்தனர். அப்போது ராகுல் காந்தி பேசியதாவது: அலிகாரின் பூட்டுத் தொழில், கைவினைஞர்களின் தயாரிப்புகள் உலகளவில் புகழ்பெற்றவை. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டும் மலிவான பொருட்கள் இந்திய சந்தைகளை நிறைப்பதால் உள்ளூர் சிறுதொழில், குடிசைத் தொழில்கள் அழியும் தருவாயில் உள்ளன. அதேநேரம், பெரிய வணிக நிறுவனங்கள்...
நாடு முழுவதும் ரூ.41,000 கோடியில் 2,000 ரயில்வே திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். சில ரயில்வே திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார். அம்ருத் பாரத் ரயில் நிலையம்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள 1,318 ரயில் நிலையங்களை உலகத் தரத்துக்கு தரம் உயர்த்த திட்டமிடப்பட்டு உள்ளது. முதல்கட்டமாக கடந்த ஆண்டில் 58 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அம்ருத் பாரத்...
ஜார்கண்ட் சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்க முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி மறுத்தது. ஜார்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரனை நிதி மோசடி வழக்கில் அமலாக்கத்துறை கடந்த மாதம் 31-ம் தேதி கைது செய்தது. இதையடுத்து அவர் முதல்வர் பதவியை இழந்தார். இதையடுத்து ஜேஎம்எம் கட்சியை சேர்ந்த சம்பய் சோரன் முதல்வரானார். அவரது தலைமையிலான அரசு சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்தித்த போது,ஓட்டெப்பில் பங்கேற்க பிர்சா...
ரியாணாவின் நூ நகரில் கடந்த ஆண்டு ஜூலை 31-ம் தேதி விஸ்வ இந்து பரிஷத் (விஎச்பி) ஊர்வலத்தில் ஒரு கும்பல் கல்வீசி தாக்கியதை தொடர்ந்து கலவரம் வெடித்தது. இந்த மோதலில் இரண்டு ஊர்க்காவல் படையினர் மற்றும் ஒரு மதகுரு உட்பட 6 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து வழக்கறிஞர் கூறுகையில், “காங்கிரஸ் எம்எல்ஏமம்மன் கான் மீது போடப்பட்டஎஃப்ஐஆரில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமான யுஏபிஏ-வின்கீழ் போலீஸார் குற்றச்சாட்டுகளை சேர்த்துள்ளனர். கான் வன்முறையை தூண்டியதாகவும்,...
கர்நாடகாவில் கோயில்களுக்கு 10 சதவீதம் வரி விதிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய சட்ட திருத்தத்துக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் நடந்துவரும் ப‌ட்ஜெட் கூட்டத்தொடரில் நேற்று, ‘கர்நாடக இந்து சமய நிறுவனங்கள் மற்றும் அறநிலையத்துறை (திருத்தம்) மசோதா’வை நிறைவேற்றியது. இந்த சட்டத்திருத்தத்துக்குப் பிறகு, கோயிலின் மொத்த ஆண்டு வருமானம் ரூ.1 கோடிக்கும் அதிகமாக இருந்தால், அந்த கோயில்கள் 10 சதவீதம் வரி செலுத்த வேண்டும். ரூ.10 லட்சம் முதல்...
ஆந்திர மாநிலம் முழுவதும் காலியாக உள்ள அரசு ஆசிரியர் பணி இடங்களை உடனடியாக நிரப்பக் கோரி ஆந்திர மாநில தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்தது. இதை முன்னிட்டு அக்கட்சியின் மாநில தலைவர் ஒய்.எஸ். ஷர்மிளா முன்தினம் இரவே விஜயவாடா சென்று, ஆந்திர ரத்னா பவனில் தங்கினார்.நேற்று காலை ஒய்.எஸ். ஷர்மிளா மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உண்டவல்லியில் உள்ள தலைமைச் செயலகம்...
மேற்குவங்க மாநிலம் சந்தேஷ்காலியில் பாலியல் வன்கொடுமை மற்றும் நில அபகரிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஷாஜகான் ஷேக் மீது அமலாக்கத் துறை பணமோசடி வழக்கு பதிவு செய்துள்ளது. நில அபகரிப்பு குற்றச்சாட்டு தொடர்பாக புதிய வழக்கை பதிவு செய்துள்ள அமலாகத் துறை, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் முதல் தகவல் அறிக்கைக்கு இணையான புதிய அமலாக்கத் துறை வழக்குத் தகவல் அறிக்கை (ECIR) பதிவு...
காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளிலிருந்து வருமான வரித் துறை நேற்று ரூ.65 கோடியை வரி நிலுவையாக பிடித்தம் செய்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் “ஜனநாயகத்துக்கு விரோதமாக வருமான வரித் துறை செயல்படுகிறது” என்று விமர்சித்துள்ளது. கடந்த வாரம், வருமான வரித் துறை காங்கிரஸ் கட்சியின் முக்கியமான நான்கு வங்கிக் கணக்குகளை முடக்கியது. இதை எதிர்த்து, வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் காங்கிரஸ் முறையிட்டது. அதைத் தொடர்ந்து வங்கிக்...
ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் கட்சியின் மற்றொரு எம்.பி. நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் கட்சியை விட்டும் விலகினார்.வரும் மக்களவைத் தேர்தலுடன் ஆந்திர சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற உள்ளது. இந்நிலையில் மக்களிடையே செல்வாக்கு இல்லாத அல்லது செல்வாக்கு குறைந்த எம்.பி., எம்எல்ஏ.க்கள் பலரை வரும் தேர்தலில் வேறு தொகுதியில் போட்டியிட வைக்க முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி திட்டமிட்டுள்ளார். வேட்பாளர்கள் மாற்றம்: இதற்காக 4-வது கட்டமாக வேட்பாளர்களை மாற்றிய...
கர்நாடகாவில் கடந்த ச‌ட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக பெங்களூரு ஆசிரியர் தொகுதி எம்எல்சி புட்டண்ணா தனது பதவியை ராஜினாமா செய்தார்.ஆனால் அவருக்கு காங்கிரஸ் சார்பாக சீட் வழங்கப்படவில்லை. இதனால் கடந்த வாரம் நடந்த பெங்களூரு ஆசிரியர் தொகுதி சட்டமேலவை இடைத்தேர்தலில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாஜக - மஜத கூட்டணி சார்பில் ஏ.பி.ரங்கநாத் போட்டியிட்டார்.இந்த தேர்தலில் 16,063 வாக்குகள் பதிவாகின. இந்த வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில்...