ஆஸ்திரியாவில் அந்நாட்டு பிரதமர் கார்ல் நெகம்மரைச் சந்தித்துப் பேசிய பிரதமர் மோடி, உக்ரைன் - ரஷ்யா விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து எடுத்துரைத்தார். அப்போது, 'இது போருக்கான நேரம் அல்ல' என்ற தனது முந்தைய கருத்தை மீண்டும் அவர் உறுதிப்படுத்தினார்.
ரஷ்ய பயணத்தை முடித்துக்கொண்டு இரண்டு நாள் பயணமாக நேற்றிரவு (செவ்வாய்க்கிழமை) ஆஸ்திரியா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆஸ்திரியா பிரதமர் கார்ல் நெகம்மர், பிரதமர் மோடியை...
மத்திய அரசு ஊழியர்களுக்கு 50% ஓய்வூதியத்துக்கு உத்தரவாதம்: பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்ப்பு
admin - 0
தேசிய ஓய்வூதிய திட்டத்தில் (என்பிஎஸ்) அங்கம் வகிக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அவர்களுக்கு கடைசியாக வழங்கப்பட்ட ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக தருவதை உத்தரவாதமாக்கும் வகையிலான அறிவிப்புகள் வரும் பட்ஜெட்டில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பழைய ஓய்வூதிய முறை கடந்த 2003-ம் ஆண்டு கைடவிடப்பட்டது. அதற்கு பதிலாக, ஊழியர்கள் பங்கேற்புடன் கூடிய தேசிய ஓய்வூதிய திட்டம் 2004—ம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தது. அந்த ஆண்டிலிருந்து மத்திய அரசு பணியில்...
மக்களவை எதிர்க்கட்சி தலைவர்ராகுல் காந்தியை நாடாளுமன் றத்திலேயே கன்னத்தில் அறைய வேண்டும் என்று பேசிய கர்நாடக பாஜக எம்எல்ஏ பாரத் ஷெட்டி மீது 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கர்நாடகாவில் உள்ள மங்களூரு வடக்கு தொகுதி எம்எல்ஏ பரத் ஷெட்டி நேற்று முன்தினம் மாலை மங்களூருவில் நடந்த பாஜகவின் பொதுக்கூட்டத்தில் பேசுகையில், “ராகுல் காந்தி குஜராத் மாநிலம் சென்றால் சிவபெருமானின் தீவிர பக்தரை போல நடிக்கிறார்.
அதே ராகுல் கேரளாவுக்கு சென்றால்...
கருணாநிதி நினைவு நாணயம் வெளியிட மத்திய அரசு அனுமதி: கெஜட்டில் விரைந்து வெளியிட நிதியமைச்சகம் உத்தரவு
admin - 0
தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று, முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நினைவுநாணயத்திற்கு மத்திய நிதியமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இது குறித்த அறிவிப்பை அரசு கெஜட்டில் விரைந்து வெளியிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தின் முன்னாள் முதல்வரான திமுகவின் தலைவருக்காக ‘முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் எம்.கருணாநிதி’ என்ற பெயரில் ஒரு நினைவு நாணயம் வெளியிட தமிழ்நாடு அரசு விரும்பியது. இதற்காக, ரூ.100 மதிப்பில் நினைவு நாணயம்வெளியிடும்படி மத்திய நிதியமைச்சகத்திடம் தமிழக முதல்வர்மு.க.ஸ்டாலின் அரசு சார்பில்கடந்த...
சட்டவிரோத உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை: டெல்லியில் பெண் மருத்துவர் உட்பட 7 பேர் கைது
admin - 0
சட்டவிரோத உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடர்பாக பெண் மருத்துவர் உட்பட 7 பேரை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர்.
வங்கதேசம் மற்றும் டெல்லியில் சட்டவிரோத உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடைபெறுவதாக டெல்லி போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கடந்த 2 மாதங்களாக போலீஸார் இது தொடர்பான தகவல்களை திரட்டினர். இந்நிலையில், இது தொடர்பாக பெண் மருத்துவர் உட்பட 7 பேரை டெல்லி குற்றப் பிரிவு...
உ.பி.யில் பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் முதல் தவணை ரூ.40 ஆயிரம் பெற்ற பின்னர் திருமணமான 11 பெண்கள் காதலருடன் மாயம்
admin - 0
பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் (பிஎம்ஏஒய்) முதல் தவணையைப் பெற்றுக் கொண்ட திருமணமான 11 பெண்கள், தங்களது காதலர்களுடன் வீட்டைவிட்டு மாயமான சம்பவம் உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.
நாடு முழுவதும் பிரதமரின் பிஎம்ஏஒய் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் மக்கள் பயன் பெற்று வருகின்றனர். இந்த திட்டம் பாஜகஆளும் உத்தர பிரதேச மாநிலத்திலும் பிரபலமாக உள்ளது. அண்மையில் அந்த மாநிலத்தின் மகராஜ்கஞ்ச் மாவட்டத்தில் மட்டும் 2,350 பேர்...
பிஹார், மேற்கு வங்கம், தமிழகம், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் ஆகிய ஏழு மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்றத் தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு புதன்கிழமை தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. மாலை 6 மணிக்கு முடிவடைய உள்ள நிலையில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்து வருகிறது
மேற்கு வங்க மாநிலத்தில் ராய்கஞ்ச், ரணகாட் தக்ஷின், பாக்தா மற்றும் மணிக்தலா...
சென்னை மாநகராட்சி சார்பில் நாளை (ஜூலை 10) தெரு நாய்களை கணக்கெடுக்கும் பணி தொடங்க இருப்பதாக மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி, உலகளாவிய கால்நடை சேவை நிறுவனம், தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம்மற்றும் தன்னார்வலர்களுடன் இணைந்து தெரு நாய்களை கணக்கெடுக்கும் பணியை மேற்கொள்ள உள்ளது.
இப் பணியில் ஈடுபடுவோருக்கான பயிற்சி முகாம் ரிப்பன் மாளிகைவளாகத்தில் நேற்று நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் பங்கேற்று, முகாமைத்தொடங்கிவைத்தார். பின்னர் அவர்...
முதிர்ச்சி இல்லாமல் செயல்படுகிறார் ராகுல்காந்தி: மத்திய அமைச்சர் சிவராஜ் சவுகான் குற்றச்சாட்டு
admin - 0
குழப்பம் மற்றும் பொய்களை மட்டுமே ராகுல் காந்தி பரப்புகிறார் என்று மத்திய அமைச்சர் சிவராஜ் சவுகான் கூறினார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி கடந்த சனிக்கிழமை அகமதாபாத்தில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “அயோத்தியில் பாஜகவை தோற்கடித்ததன் மூலம், பாஜக மூத்த தலைவர் அத்வானியால் தொடங்கப்பட்ட ராமர் கோயில் இயக்கத்தை இண்டியா கூட்டணி தோற்கடித் துள்ளது” என்றார்.
சமீபத்திய மக்களவைத் தேர்தலில் அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் தொகுதியில் பாஜக வேட்பாளரை...
வெளிநாட்டு தலைவர்கள் இந்தியாவுக்கு வரும்போது அவர்களுக்கு சேவை செய்வதற்காக ரூ.20 கோடி மதிப்பில் 4 கவச கார்களை மெர்சிடிஸ் நிறுவனத்திடமிருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: வெளிநாட்டு தலைவர்களின் இந்திய வருகையின்போது அவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வது மிக முக்கியமாகிறது. இதனை கருத்தில் கொண்டு 4 கவச மெர்சிடிஸ் கார்களை ஜெர்மனியின் டெய்ம்லர் நிறுவனத்திடமிருந்து மத்திய அரசு வாங்க உள்ளது. இதற்காக,...










