Google search engine
ஒடிசா மாநிலத்தில் உள்ள புரி ஜெகந்நாதர் கோயிலில் ரத்ன பண்டார் என்ற கருவூல அறை உள்ளது. ஒடிசா அரசு அனுமதி வழங்கியதையடுத்து 46 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 14-ம் தேதி கருவூல அறை திறக்கப்பட்டது. அப்போது அங்கு 5 முதல் 7 சிறிய பழங்கால சிலைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து ரத்ன பண்டாரை திறப்பதற்காக அமைக்கப்பட்ட 11 உறுப்பினர் கொண்ட குழுவின் தலைவர் விஸ்வநாத் ரத் கூறுகையில், ‘‘ரத்ன...
கேங்ஸ்டர் ஆதிக் அகமதின் ரூ.50 கோடி சொத்துகள் உத்தர பிரதேச அரசுக்கு மாற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆதிக் மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது மீது 100-க்கும் மேற்பட குற்ற வழக்குகள் இருந்த நிலையில், உத்தர பிரதேச காவல் துறை இவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மருத்துவ பரிசோதனைக்காக இவர்களை காவல் துறை அழைத்துச் சென்றபோது, கூலிப்படையினர் இவர்கள் மீது துப்பாக்கிச்...
யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 821-வது ரேங்க் பெற்றவர் பூஜா கேத்கர், மகாராஷ்டிராவின் புனே உதவி ஆட்சியராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், அதிகார துஷ்பிரயோகம் குறித்த புகாரின் பேரில் வாசிம் மாவட்டத்துக்கு அவர் மாற்றப்பட்டார். இதையடுத்து ஓபிசி இடஒதுக்கீட்டை தவறாக பயன்படுத்தியது, பார்வைத் திறன் குறைபாடு மற்றும் மூளைத்திறன் குறைபாடு இருப்பதாக பொய்யான தகவலை அளித்ததாக பூஜா மீது புகார் எழுந்தது. இதுதொடர்பாக மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை...
மணல் கடத்தல் தொடர்பான மனுவுக்கு தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநிலங்கள் பதில் அளிக்கத் தவறினால் தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது. அரசுகள் சட்ட விதிமுறைகளைக் கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த தவறுவதால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மணல் கடத்தல் அத்துமீறி நிகழ்ந்து வருவதாகக் கடந்த 2018-ம் ஆண்டில் மனுதாரர் அழகிரிசாமி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்தமனு நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது மனுதாரர் சார்பாக...
தெலங்கானா மாநிலத்தில் உள்ள கோயில்களின் உண்டியல்களில் பக்தர்கள் பணம், தங்கம், வெள்ளி பொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். தங்கத்தை மும்பை மிண்ட் பகுதியில் உருக்கி, அதனை வங்கிகளில் டெபாசிட் செய்து, அதற்கு தகுந்த பத்திரங்களை பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வரும் வட்டியை கோயிலின் வளர்ச்சி பணிகளுக்கு உபயோகிப்பது என மாநில இந்து சமய அறநிலைய துறை முடிவெடுத்துள்ளது. இந்த திட்டம் படிப்படியாக அமல்படுத்தப்படும். ஆண்டுதோறும் அதிகரிக்கும் காணிக்கைகளை வங்கிகளில் டெபாசிட்...
உத்தராகண்ட் மாநிலம் பாகேஷ்வர் மாவட்டத்தில் உள்ள பனிமலை அருகே தேவி குந்த் என்ற புனித ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு அருகே சுதேர்துங்கா ஆறு பாய்கிறது. பனிமலையிலிருந்து வரும் நீரால் உருவான ஏரி என்பதால் தேவிகுந்த் ஏரியை இப்பகுதி மக்கள் புனித ஏரியாக போற்றி வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த ஏரிக்கு அருகே பாபா சைதன்யா ஆகாஷ் என்ற சாமியார், சட்டவிரோதமாக சிறிய அளவிலான கோயில் கட்டியுள்ளார். இதில் கடந்த...
தேர்தல் முடிவில் அதிருப்தி தெரிவிக்கும் வேட்பாளர்கள் விரும்பும் வகையில் வாக்குப்பதிவு இயந்திரங்களின் பதிவுகளை சரிபார்ப்பதற்கான நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை (எஸ்ஓபி) தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. மக்களவை தேர்தல் முடிவுகள் கடந்த 4-ம் தேதி வெளியிடப்பட்டது. அதிருப்தி வேட்பாளர்கள், உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு தங்கள் தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்ப்பதற்கும் வழிவகை உள்ளது. மக்களவை தேர்தலில் வாக்குப்பதிவுகளை சரிபார்க்க 8 வேட்பாளர்களும், சட்டப்பேரவை தேர்தல் முடிவு களை சரிபார்க்க 3 வேட்பாளர்களும்...
நியூயார்க் நகரில் தேர் திருவிழா நடைபெற உதவிய டொனால்டு ட்ரம்ப் உயிரை ஜெகந்நாதர் காப்பாற்றி விட்டார் என இஸ்கான் அமைப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம், பட்லர் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் ட்ரம்ப்பின் காதில் லேசான காயம் ஏற்பட்டது. அவர் நூலிழையில் உயிர் தப்பினார். துப்பாக்கிச்சூடு நடத்திய 20 வயது...
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு ட்ரம்ப் மீது நேற்று முன்தினம் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. ட்ரம்ப் மீதான வெறுப்புணர்வின் காரணமாக தாமஸ் மேத்யூ என்பவர் தனிநபராக அவரை கொலை செய்ய முயன்றிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தை மேற்கோள் காட்டி பாஜக செய்தித் தொடர்பாளர் அமித் மாளவியா சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது: ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது என்ற கருத்தை மையமாகவைத்து அமெரிக்க அதிபர் தேர்தலில்...
சீனா மற்றும் தேசிய பாதுகாப்பு விவகாரங்களில் நிபுணராக கருதப்படும் விக்ரம் மிஸ்ரி (59), நாட்டின் புதிய வெளியுறவு செயலாளராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். வெளியுறவுத் துறையின் செயலாளராக இருந்த வினய் குவாத்ரா கடந்த மார்ச் மாதத்துடன் ஓய்வுபெற இருந்த நிலையில் அவருக்கு ஜூலை 14 வரை பணிநீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் வினய் குவாத்ரா நேற்றுமுன்தினம் ஓய்வு பெற்றதை தொடர்ந்து புதிய வெளியுறவு செயலாளராக விக்ரம் மிஸ்ரி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்....