தலைநகர் தலைநகர் டெல்லியில் 40 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து மாணவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு பள்ளிகளில் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மதர் மேரி, கேம்ப்ரிட்ஜ் பப்ளிக் பள்ளி, பிரிட்டிஷ் பள்ளி, சல்வான் பப்ளிக் பள்ளி உள்பட 40 பள்ளிகளில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. ‘30 ஆயிரம் அமெரிக்க டாலர் வேண்டும்’ - மிரட்டல் மின்னஞ்சல் scottielanza@gmail.com என்ற முகவரியில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது. அதை அனுப்பிய நபர்,...
திருப்பதி ஏழுமலையான் குடிகொண்டுள்ள கர்ப்பக் கிரகம் உட்பட தங்க விமான கோபுரத்தின் கீழே உள்ள சுவர்கள் முழுவதும் வேலூர் பொற்கோயில் போன்று தங்க தகடுகள் பொருத்த வேண்டும் என 2008-ல் அப்போதைய தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஆதிகேசவுலு நாயுடு விரும்பினார். இதற்கு அறங்காவலர் குழுவும் ஒப்புதல் அளித்தது. இதனைத் தொடர்ந்து, இதற்காக பக்தர்களிடம் இருந்து தங்கத்தை நன்கொடையாக பெறுவது என தீர்மானிக்கப்பட்டது. இது குறித்து அறிவிப்பு வந்ததும் பலர்...
ஆந்திர மாநிலத்தில் பொங்கல் பண்டிகைக்காக பந்தய சேவல் விற்பனை தொடங்கி உள்ளது. ஒவ்வொரு சேவலும் ஆன்லைனில் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.3 லட்சம் வரை விற்க தொடங்கி உள்ளது. ஆந்திராவில் பொங்கல் பண்டிகை வந்தால் தொடர்ந்து 3 அல்லது 4 நாட்களுக்கு கோதாவரி மாவட்டங்களில் சேவல் பந்தயங்கள் களை கட்டுவது வழக்கம். இதற்கு இந்த ஆண்டும் விதி விலக்கல்ல எனும் வகையில் இப்போதே சேவல் விற்பனை தொடங்கிவிட்டது. வெளிநாடு வாழ்...
வரும் 2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த இலக்கை எட்ட ஒத்துழைக்க வேண்டும் என்றும் தன்னார்வலர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில், போச்சசன்வாசி அக்ஷர் புருஷோத்தம் ஸ்வாமிநாராயண் (பிஏபிஎஸ்) சன்ஸ்தா (ஆன்மிக அமைப்பு) சார்பில் கார்யகர் சுவர்ன மஹோத்சவ் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பங்கேற்று...
நிரந்தர வைப்பு நிதிக்கு (பிக்ஸட் டெபாசிட்) அதிக வரி பிடித்தம் செய்த குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த வங்கி மேலாளரை வாடிக்கையாளர் ஒருவர் புரட்டி எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. 43 வினாடிகள் ஓடும் இந்த வீடியோவில், வாடிக்கையாளர், வங்கி மேலாளர் ஒருவருக்கொருவர் தங்களது சட்டை காலரை பிடித்து அடித்துக் கொள்கின்றனர். மேலாளரின் தலைமுடியை பிடித்து இழுக்கின்றார் வாடிக்கையாளர். அப்போது, அருகில் இருந்த சக பெண் ஊழியர் மேலாளரின் பெயரைக்...
கேரளத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காட் கத்தோலிக்க திருச்சபையின் கார்டினலாக நியமனம் செய்யப்பட்டிருப்பது இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம் ஆகும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது: புனித போப் பிரான்சிஸ் அவர்களால் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் கார்டினலாக கேரளத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காட் நியமிக்கப்பட்டுள்ளது பெருமகிழ்ச்சி. இது, இந்தியாவுக்கு கிடைத்த கவுரவம், பெருமையாகும். இயேசுவின் தீவிர சீடராக விளங்கும்...
உத்தராகண்டில், ஆம்புலன்ஸுக்கு பணம் இல்லாததால் தம்பியின் உடலை வாடகை காரின் மேற்கூரையில் வைத்து அவரது அக்கா வீட்டுக்கு கொண்டு சென்றார். இதுகுறித்து விசாரணை நடத்த முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார். உத்தராகண்டின் பித்தோரகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்த் பிரசாத். இவருக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். வயது முதுமை காரணமாக கோவிந்த் பிரசாத் வீட்டில் ஓய்வெடுக்கிறார். மூத்த மகள் ஷிவானி, உத்தராகண்டின் ஹால்டுகார் பகுதியில் உள்ள நிறுவனத்தில்...
மத்திய பிரதேசத்தில் பெட்ரோல் பங்க் அலுவலகத்தில் நுழைந்த ஒருவர், பிரார்த்தனை செய்துவிட்டு ரூ.1.57 லட்சத்தை திருடிச் சென்றுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் மச்சல்பூர் மாவட்டம் சோயத் கலன் - சுஜால்பூர் நெடுஞ்சாலையில் ஒரு பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது. கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் ஊழியர்கள் தூக்கிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்குள்ள அலுவலகத்தில் நுழைந்த ஒருவர், ரூ.1.57 லட்சத்தை திருடிச் சென்றுள்ளார். இதுகுறித்து ஊழியர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதையடுத்து, சம்பவ...
உத்தர பிரதேச மாநிலம் மொரதாபாத்தை சேர்ந்த முஸ்லிம் தம்பதி இஜாசுல் -நிதா. சம்பல் வன்முறை தொடர்பான வீடியோவை பார்த்த நிதா கலவரத்தை கட்டுப்படுத்த போலீஸார் எடுத்த நடவடிக்கையை பாராட்டி பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது கணவர் இஜாசுல் மூன்று முறை தலாக் சொல்லி நிதாவை விவாகரத்து செய்துள்ளார். இந்த செய்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரேபிய மொழியில் தலாக் என்றால் விவாகரத்து என்று அர்த்தம். இதுகுறித்து புர்கா அணிந்தபடி...
உத்தராகண்ட் மாநிலத்தில் குளிர்கால சார்தாம் யாத்திரைக்கான ஏற்பாடுகளை மாநில அரசு தொடங்கியுள்ளது என்றும், இது உத்தராகண்ட் மாநில சுற்றுலாவில் மிகப் பெரிய மாற்றமாக இருக்கும்’’ என முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறியுள்ளார். கேதார்நாத் கோயிலில் நேற்றுமுன்தினம் வழிபாடு நடத்திய உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, குளிர்கால சார்தாம் யாத்திரை குறித்து அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்த முறை குளிர்கால புனித பயணத்தை நாங்கள் தொடங்கியுள்ளோம். இதற்கான திட்டங்கள், ஏற்பாடுகள்...