Google search engine

குமரி: 1047 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நாகர்கோவிலில் மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலவாணி 1047 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர்...

ஒழுகுனேசேரி ஆராட்டு துறையில் இருந்து ஊர்வலம்

சபரிமலை ஐயப்பன் கோயில் 41வது நாளான மண்டல பூஜை விழாவான இன்று (டிச. 26) நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதி அழகம்மன் சமேத சுந்தரேஸ்வரர் கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீ தர்மசாஸ்தா சுவாமிக்கு ஒழுகுனேசேரி ஆராட்டு துறையில் இருந்து ஐயப்ப பக்தர்கள் பால், மஞ்சள் பொடி, களபம், நெய் போன்ற...

குளச்சல்: பைக் மீது வாகனம் மோதி மெக்கானிக் உயிரிழப்பு

குளச்சல் அருகே கடியப்பட்டணம் அன்னை தெரசா தெருவைச் சேர்ந்தவர் மரியா சிகாமணி மகன் ரோகின் எம் மரியா (36). இவருக்கு கார்மல் நிதிதா என்ற மனைவியும் 11 மாதங்களில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. ரோகின் எம் மரியா பஹ்ரைன் நாட்டில் உள்ள நிறுவனத்தில் மெக்கானிக்காக வேலை...

கருங்கல்: வேகத்தடையில் தடுமாறி விழுந்த வாலிபர் உயிரிழப்பு

குளச்சல் அருகே கோடிமுனை பகுதி சைமன் காலனியைச் சேர்ந்தவர் விஷால் தாதேயுஸ் (26). இவர் கிறிஸ்துமஸ் குடில் பார்ப்பதற்காக தனது மோட்டார் சைக்கிளில் நேற்று மாலையில் கருங்கல் பகுதிக்குச் சென்றார். தெருவுகடை பகுதியில் வைத்து சாலையில் இருந்த வேகக்கட்டுப்பாட்டில் நிலைதடுமாறி விழுந்து படுகாயமடைந்தார். அவரை நண்பர்கள் மீட்டு...

திருவட்டார்: பூசாரியை தாக்கி கோவில் சிலை சேதப்படுத்தியவர் கைது

திருவட்டார் அருகே வீயன்னூர் பகுதியில் இசக்கி அம்மன், பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பூசாரியாக அதே பகுதியை சேர்ந்த சுந்தர் (49) என்பவர் இருந்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த டெம்போ டிரைவரான சஜின் (27) என்பவருக்கும் சொத்து பிரச்சனை சம்பந்தமாக முன் விரோதம்...

வீயன்னூர்: ஊழியர் மீது தாக்குதல்; 4 பேர் மீது வழக்கு

திருவட்டாறை அருகே பூவன்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜெய்சிங் டேவிட் ராஜன் (55) இவர் நாகர்கோவில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இதற்காக அவர் வெட்டூர்ணிமடம் பகுதியில் குடும்பத்துடன் வாடகைக்கு வீட்டில் வசித்து வருகிறார். வாரந்தோறும் பூவன்கோட்டில் உள்ள வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். ஜெய்சிங்...

கருங்கல்: பிடிபட்ட வணிக வளாகத்தில் திருடிய வாலிபர்

கருங்கல் அருகே முள்ளங்கினா விளை பகுதியில் எட்வின் ராஜ் என்பவரின் உறவினருக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. வணிக வளாக உரிமையாளர் சென்னையில் வசித்து வருவதால், எட்வின் ராஜ் அந்த வளாகத்தை கவனித்து வருகிறார். தற்போது கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக வணிக வளாக உரிமையாளர் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு...

கிள்ளியூர்: மன்மோகன் சிங் மரணம்;  எம். எல். ஏ. இரங்கல்

கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவருமான தராஜேஷ் குமார் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது: - இந்திய பொருளாதாரத்தை நெருக்கடியிலிருந்து மீட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இழப்பு இந்திய நாட்டிற்கும் காங்கிரஸ் பேரியக்கத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு. உலக தலைவர்கள்...

கோட்டார்: லாட்டரி சீட்டுகள் வைத்திருந்த 3 பேர் மீது வழக்கு

கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் சப் இன்ஸ்பெக்டர் சத்திய சோபன் நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் நேற்று ரோந்து சுற்றி வந்த போது அனுப் மோன், பூமா, மற்றும் பகவதி ஆகியோர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை வைத்திருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் மீது சப் இன்ஸ்பெக்டர் சத்திய சோபன் வழக்கு...

களியக்காவிளை: கனரக லாரி மோதி கிறிஸ்தவ போதகர் பலி

களியக்காவிளை அருகே காரக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயன் (62). இவர் களியக்காவிளை அருகே பனங்காலை பகுதியில் உள்ள பெந்தேகொஸ்தே சபையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக போதகராக இருந்து வந்தார்.  இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் பாறசாலையில் இருந்து களியக்காவிளை நோக்கி வந்து கொண்டிருந்தார். காராளி பகுதியில் வந்தபோது பின்னால்...