திருவட்டார் அருகே வீயன்னூர் பகுதியில் இசக்கி அம்மன், பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பூசாரியாக அதே பகுதியை சேர்ந்த சுந்தர் (49) என்பவர் இருந்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த டெம்போ டிரைவரான சஜின் (27) என்பவருக்கும் சொத்து பிரச்சனை சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சுந்தர் கோவிலில் பூஜை செய்து கொண்டிருந்தபோது, சஜின் அங்கு வந்து தகாத வார்த்தைகள் பேசி தகராறில் ஈடுபட்டார். பின்னர் திடீரென கோவில் உள்ள சாமி சிலைகளை சேதப்படுத்திவிட்டு பூசாரிக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றார். இது குறித்த புகாரின் பேரில் திருவட்டாறு போலீசார் வழக்கு பதிவு செய்து சஜினை நேற்று (26-ம் தேதி) கைது செய்தனர்.