குளச்சல் அருகே கோடிமுனை பகுதி சைமன் காலனியைச் சேர்ந்தவர் விஷால் தாதேயுஸ் (26). இவர் கிறிஸ்துமஸ் குடில் பார்ப்பதற்காக தனது மோட்டார் சைக்கிளில் நேற்று மாலையில் கருங்கல் பகுதிக்குச் சென்றார். தெருவுகடை பகுதியில் வைத்து சாலையில் இருந்த வேகக்கட்டுப்பாட்டில் நிலைதடுமாறி விழுந்து படுகாயமடைந்தார். அவரை நண்பர்கள் மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.