பொன்மனை பகுதியில் உள்ள மரவூர் கண்டன் சாஸ்தா கோவிலில் இருந்து 30 கிலோ எடை கொண்ட 3 வெண்கல குத்துவிளக்குகள் திருடப்பட்டன. இது குறித்து கோவில் செயலாளர் மகேஷ் குலசேகரம் அளித்த புகாரின் பேரில், குலசேகரம் பகுதியைச் சேர்ந்த செல்வன் (51) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து திருட்டுப் போன விளக்குகளும் மீட்கப்பட்டன.















