சபரிமலை ஐயப்பன் கோயில் 41வது நாளான மண்டல பூஜை விழாவான இன்று (டிச. 26) நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதி அழகம்மன் சமேத சுந்தரேஸ்வரர் கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீ தர்மசாஸ்தா சுவாமிக்கு ஒழுகுனேசேரி ஆராட்டு துறையில் இருந்து ஐயப்ப பக்தர்கள் பால், மஞ்சள் பொடி, களபம், நெய் போன்ற அபிஷேகப் பொருட்களை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். இந்த நிகழ்வில் நாகர்கோவில் மாமன்ற உறுப்பினர் அக்ஷயா கண்ணன் கலந்து கொண்டனர்.