கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் சப் இன்ஸ்பெக்டர் சத்திய சோபன் நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் நேற்று ரோந்து சுற்றி வந்த போது அனுப் மோன், பூமா, மற்றும் பகவதி ஆகியோர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை வைத்திருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் மீது சப் இன்ஸ்பெக்டர் சத்திய சோபன் வழக்கு பதிவு செய்து அவர்களிடம் இருந்த லாட்டரி சீட்டுகள், ஒரு செல்போன், ரூ. 1500 பணம் ஆகியவைகளை பறிமுதல் செய்தார்.