நித்திரவிளை: இறைச்சி கடைகளால் நாய்கள் தொல்லை
நித்திரவிளை அருகே உள்ள காஞ்சாம்புறம், நம்பாளி, நடைக்காவு உட்பட சில பகுதிகளில் சாலையோரங்களில் இறைச்சி கடைகள் உள்ளன. இந்த கடைகளில் இருந்து வெளியே வீசும் இறைச்சி கழிவுகளை உண்பதற்கு கடைகளின் முன்பு உள்ள சாலையில் ஏராளமான நாய்கள் கூட்டமாக நிற்பது உண்டு.
இறைச்சி கடை இரவு பூட்டிவிட்டு சென்ற...
நாகர்கோவிலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டம்
சட்டமேதை அம்பேத்கரை அவமதித்த மத்திய மந்திரி அமித்ஷா பதவி விலக கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி ஆகிய கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நேற்று (டிசம்பர் 30) நடந்தது.
இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய...
நாகர்கோவில் ரயில் நேரம் மாற்றம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து மும்பைக்கு தினசரி காலை 6.15 மணிக்கு எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்று வருகிறது. இந்த ரயில் நேரம் நாளை முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாளை ஜன. 1ம் தேதி காலை 6.45 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து இந்த ரயில் புறப்பட்டு...
அருமனை: மாலைக்கோட்டில் மரம் நடும் விழா
அருமனை அருகே மாலைகோட்டில் உள்ள நெய்யாறு இடதுகரை கால்வாய் கரையோரம் நேரயுகேந்திரா மற்றும் ஹார்ட் பீட்ஸ் கிளப், பள்ளி மாணவர்கள் சார்பில் 101 மரம் நடுவிழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தக்கலை அரசு பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் ஜோ பிரகாஷ் கலந்து கொண்டார். கிளப்பின்...
மார்த்தாண்டம்: இன்று இரவு நற்செய்தி கூட்டம்
மார்த்தாண்டம் அருகே உள்ள நெட்டியான் விளையில் கர்த்தர் அதிசயங்களை செய்கிறார் என்ற தேவாலயம் உள்ளது. இந்த ஆலயம் சார்பில் ஆலய வளாகத்தில் வாக்குத்தத்த ஆசீர்வாத கூட்டம் என்ற தலைப்பில் நற்செய்தி கூட்டம் இன்று 31-ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 9:30 மணி முதல் நள்ளிரவு 2 மணி...
கொல்லங்கோடு: தூக்க நேர்ச்சை பெயர் பதிவு ஜனவரி 5 ல் தொடக்கம்
கிள்ளியூர் தொகுதி, கொல்லங்கோட்டில் பிரசித்தி பெற்ற பத்திரகாளி அம்மன் கோவில் தூக்கத் திருவிழா வருகின்ற மார்ச் மாதம் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விழாவில் முக்கிய நிகழ்வான குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை ஏப்ரல் 1ஆம் தேதி நடக்கிறது. தூக்க நேர்ச்சையில் கலந்துகொள்ளும் குழந்தைகளுக்கான பெயர் பதிவு முதல்கோயிலில்...
நாகர்கோவில்: சிவன் கோவில் மார்கழி மாத பஜனை நிகழ்ச்சி
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி பார்வதிபுரம் அருகே உள்ள களியங்காடு அருள்மிகு சிவன் கோவிலில் மார்கழி மாதம் ஞாயிற்றுக்கிழமையான இன்று (டிச. 29) காலை சிவபெருமானுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் மார்கழி மாத பஜனை நடைபெற்றது. இதில் பஜனை குழுவினர் கோவில் வளாகம்...
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு புதிய எஸ்.பி. நியமனம்
கன்னியாகுமரி மாவட்டத்தின் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்து வந்த சுந்தரவதனம் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் காவல் துணை ஆணையராக பணியாற்றி வந்த ஸ்டாலின் தற்போது கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் 2025 ஆம் ஆண்டு 1 ஆம் தேதி பொறுப்பேற்க உள்ளதாக...
புதுக்கடை: ஓய்வு பெற்ற ஆசிரியர்மீது தாக்கு 2 பேர் மீது வழக்கு
மாராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜார்ஜ் வில்சன் (80). ஓய்வுபெற்ற அரசு ஆசிரியர். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஜீவலால் (25), லாறன்ஸ் (55) ஆகியோருக்கும் ஆசிரியரின் வேலியைப் பிரித்தது சம்பந்தமாக முன்விரோதம் இருந்துவந்தது. இந்நிலையில் நேற்று ஜார்ஜ் வில்சனை ஜீவலால், லாறன்ஸ் ஆகிய இரண்டுபேரும் சரமாரியாகத் தாக்கினர்....
தக்கலை: விவசாயியை தாக்கியதாக வாலிபர் கைது
தக்கலை அருகே உள்ள வெட்டிக்கோணம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (56) விவசாயி. இவருக்கு தக்கலை அடுத்த வெள்ளரி ஏலாவில் வாழைத் தோட்டம் உள்ளது. நேற்று (டிசம்பர் 29) காலையில் கிருஷ்ணன் தோட்டத்திற்கு சென்றுகொண்டிருந்த போது, வழியில் அதே பகுதியை சேர்ந்த இறக்சிக் கடையில் வேலை பார்க்கும் இர்ஷத்...













