தக்கலை அருகே உள்ள வெட்டிக்கோணம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (56) விவசாயி. இவருக்கு தக்கலை அடுத்த வெள்ளரி ஏலாவில் வாழைத் தோட்டம் உள்ளது. நேற்று (டிசம்பர் 29) காலையில் கிருஷ்ணன் தோட்டத்திற்கு சென்றுகொண்டிருந்த போது, வழியில் அதே பகுதியை சேர்ந்த இறக்சிக் கடையில் வேலை பார்க்கும் இர்ஷத் (32) என்பவர் மது குடித்துக் கொண்டிருந்தார். இதை கிருஷ்ணன் தட்டிக் கேட்டதால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த இர்ஷத் கையில் வைத்திருந்த மது பாட்டிலால் கிருஷ்ணனின் தலையில் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த கிருஷ்ணன் சிகிச்சைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து இர்ஷத்தை கைது செய்தனர்.