மாராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜார்ஜ் வில்சன் (80). ஓய்வுபெற்ற அரசு ஆசிரியர். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஜீவலால் (25), லாறன்ஸ் (55) ஆகியோருக்கும் ஆசிரியரின் வேலியைப் பிரித்தது சம்பந்தமாக முன்விரோதம் இருந்துவந்தது. இந்நிலையில் நேற்று ஜார்ஜ் வில்சனை ஜீவலால், லாறன்ஸ் ஆகிய இரண்டுபேரும் சரமாரியாகத் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த ஜார்ஜ் வில்சன் குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். புதுக்கடை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.