கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி பார்வதிபுரம் அருகே உள்ள களியங்காடு அருள்மிகு சிவன் கோவிலில் மார்கழி மாதம் ஞாயிற்றுக்கிழமையான இன்று (டிச. 29) காலை சிவபெருமானுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் மார்கழி மாத பஜனை நடைபெற்றது. இதில் பஜனை குழுவினர் கோவில் வளாகம் மற்றும் தெருக்களில் பஜனை பாடிச் சென்றனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.