Google search engine

ஈத்தாமொழி அருகே தம்பதியை தாக்கிய 2 பேர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே உள்ள நெடுவிளையைச் சேர்ந்தவர் வின்சென்ட் (வயது 42), தொழிலாளி. இவருக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த அய்யப்பன் என்பவருக்கும் பாதை தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று இரவு அய்யப்பன் தனது நண்பரான மங்கலவிளையைச் சேர்ந்த விஜயன் (32) என்பவருடன் சேர்ந்து...

நாகர்கோவிலில் லாட்டரி விற்ற 3 பேர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் லெட்சுமணன், ஜான்சன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வடசேரி அசம்புரோடு பகுதியில் நேற்று லாட்டரி விற்றதாக அறுகுவிளையைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 37), வெட்டூர்ணிமடம் பகுதியைச் சேர்ந்த அன்புகுமரன் (49), வடசேரி பெரியராசிங்கன் தெரு பகுதியைச்சேர்ந்த கண்ணன்...

மார்த்தாண்டம்: கொத்தனார் மண்டை உடைப்பு.. 4 பேர் மீது வழக்கு

மார்த்தாண்டம் அருகே நட்டாலம் பகுதியைச் சேர்ந்தவர் அபிஷேக் (25). இவர் கொத்தனார். நேற்று இரவு அபிஷேக் அண்ணன் யாழ்சன் என்பவருடன் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் மது அருந்துவதற்காகச் சென்றிருந்தனர். அங்கு அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த ரகு (35), ஸ்ரீகுமார் (40), பிரசாத் (35),...

நித்திரவிளை: கணவரின் தங்கையை தாக்கிய பெண் மீது வழக்கு

நித்திரவிளை அருகே தூத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்டல் ஜெயினி (43). இவர் பூத்துறை பகுதியில் மெடிக்கல் ஸ்டோர் நடத்தி வருகிறார். இவரது அண்ணன் மனைவி ஷீஜா (43). இருவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.  இந்த நிலையில் நேற்று காலை கிறிஸ்டல் ஜெயினி மெடிக்கல் ஸ்டோரில் இருந்தபோது...

கடையால்: வன உரிமை சட்ட திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்

குமரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் வன உரிமை சட்டம் 2006 குறித்த மாவட்ட அளவிலான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் கடையால் பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இந்த முகாமில் மாவட்ட கலெக்டர் அழகுமீனா கலந்து கொண்டு பேசினார்....

தக்கலை: 6 கனரக வாகனங்கள் மீது நடவடிக்கை

குமரி மாவட்டத்தில் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அவர்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் தொடர் வாகன சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்ட் பார்த்திபன் மேற்பார்வையில் அந்த பகுதியில் அதிவேகமாகவும் அனுமதிக்கப்பட்ட...

ஆனந்தமங்கலம்:  அரசின் மக்கள் தொடர்பு திட்ட சிறப்பு முகாம்

தமிழக அரசின் மக்கள் தொடர்பு திட்ட சிறப்பு முகாம் பைங்குளம் ஊராட்சி, ஆனந்தமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதில் பத்மநாபபுரம் சப் கலெக்டர் வினய்குமார் மீனா மற்றும் சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் ஷேக் அப்துல்லா கலந்து கொண்டு எளிய மக்களுக்கான அரசு...

கொல்லங்கோடு: முன்னாள் எம்எல்ஏ பைக்கில் சேறு தடவல் – வழக்கு

கொல்லங்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜான் ஜோசப் (68). இவர் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ஆவார். இவரது ஊரில் 56 ஏக்கரில் நிலம் சம்பந்தமாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி சமரச குழு உருவாக்கப்பட்டு இதில் ஜான் ஜோசப் தலைவராக...

கொல்லங்கோடு:  திமுக சார்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம்

கிள்ளியூர் ஒன்றியம், கொல்லங்கோடு நகர திமுக சார்பில் தமிழக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் கண்ணநாகம் சந்திப்பில் நேற்று இரவு நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர செயலாளர் அட்வகேட் ரமேஷ் தலைமை தாங்கினார். அவை தலைவர் தாஸ், நகர துணை செயலாளர்கள் ரபி, சுனிதா முன்னிலை வகித்தனர்.  கொல்லங்கோடு...

ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் செவிலியர் தினம் கொண்டாட்டம்

போர்க்களத்தில் காயமடைந்து உயிருக்கு போராடிய வீரர்களுக்கு கைவிளக்கேந்திச் சென்றுமருத்துவம் அளித்த ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்தநாளான மே 12-ம் தேதி உலக செவிலியர் நாளாகக் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் இன்று கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர்கள் செவிலியர் தினத்தை மெழுகுவர்த்தி ஏந்தி கொண்டாடினார்....