நித்திரவிளை அருகே தூத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்டல் ஜெயினி (43). இவர் பூத்துறை பகுதியில் மெடிக்கல் ஸ்டோர் நடத்தி வருகிறார். இவரது அண்ணன் மனைவி ஷீஜா (43). இருவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று காலை கிறிஸ்டல் ஜெயினி மெடிக்கல் ஸ்டோரில் இருந்தபோது அங்கு சென்ற ஷீஜா, கிறிஸ்டல் ஜெயினியை கன்னத்தில் அறைந்தும் காலால் மிதித்தும் தாக்கியுள்ளார். இது சம்பந்தமான வீடியோ காட்சிகள் ஆதாரத்துடன் கிறிஸ்டல் ஜெயினி நித்திரவிளை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் ஷீஜா மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.