மார்த்தாண்டம் அருகே நட்டாலம் பகுதியைச் சேர்ந்தவர் அபிஷேக் (25). இவர் கொத்தனார். நேற்று இரவு அபிஷேக் அண்ணன் யாழ்சன் என்பவருடன் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் மது அருந்துவதற்காகச் சென்றிருந்தனர். அங்கு அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த ரகு (35), ஸ்ரீகுமார் (40), பிரசாத் (35), கவிராஜ் ஆகியோருடன் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த அபிஷேக் டாஸ்மாக் பாரில் சென்று தனது அண்ணனிடம் தகராறு செய்த ரகு உட்பட நான்கு பேரிடம் தட்டிக் கேட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த ஸ்ரீகுமார் பீர் பாட்டிலை எடுத்து அபிஷேக்கின் பின்னங்கால் தலையில் ஓங்கி அடித்ததில் அவர் படுகாயம் அடைந்தார். அவரை மேலும் கெட்ட வார்த்தைகளால் பேசி அந்தக் கும்பல் சரமாரியாகத் தாக்கியுள்ளது.
காயமடைந்த அபிஷேக் குழித்துறையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் ரகு, ஸ்ரீகுமார், பிரசாத், கவிராஜ் ஆகிய நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.