கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் லெட்சுமணன், ஜான்சன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வடசேரி அசம்புரோடு பகுதியில் நேற்று லாட்டரி விற்றதாக அறுகுவிளையைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 37), வெட்டூர்ணிமடம் பகுதியைச் சேர்ந்த அன்புகுமரன் (49), வடசேரி பெரியராசிங்கன் தெரு பகுதியைச்சேர்ந்த கண்ணன் (57) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 13 கேரள மாநில லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.