கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக இருந்த அழகுமீனா, தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை துணைச் செயலாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார். அவருக்குப் பதிலாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் கன்னியாகுமரி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரதாப் வரும் திங்கள்கிழமை (ஜூன் 1) நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது புதிய பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார்.















