குழித்துறை நகராட்சி ஆணையராகப் பணியாற்றும் வெங்கடாசலம், கடந்த 27ஆம் தேதி அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த பாஜக கவுன்சிலர் விஜூ, அவரை அரசுப் பணியைச் செய்ய விடாமல் தடுத்து, தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக மார்த்தாண்டம் போலீசார், ஆணையரை மிரட்டியதாகக் கூறப்படும் கவுன்சிலர் மீது நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.















