குமரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் வன உரிமை சட்டம் 2006 குறித்த மாவட்ட அளவிலான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் கடையால் பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இந்த முகாமில் மாவட்ட கலெக்டர் அழகுமீனா கலந்து கொண்டு பேசினார். அவர் கூறுகையில்: – மலை கிராமங்களில் பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மக்கள் வாசிக்கும் பகுதிகளில் அவர்களுக்கு 10 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் வழங்க வேண்டும் என 2006 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் வன உரிமை சட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த இதன் அடிப்படையில் பேச்சிப் பாறை ஊராட்சி, கடையால் பேரூராட்சி, பொன்மனை பேரூராட்சி, சுருளகோடு ஊராட்சி, தடிக்காரங் கோணம் ஊராட்சி ஆகிய பகுதிகளில் மக்கள் வசித்து வரும் கண்டறியப்பட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். என கூறினார். இந்த முகாமில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.