குமரி மாவட்டத்தில் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அவர்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் தொடர் வாகன சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்ட் பார்த்திபன் மேற்பார்வையில் அந்த பகுதியில் அதிவேகமாகவும் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவும் மாவட்ட எல்லைக்குள் நுழைந்த 6 கனரக லாரிகள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.