500 மின்சார பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்துக் கழகம் டெண்டர் வெளியிட்டுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 659 வழித்தடங்களில் 3,436 பேருந்துகள் தினமும் இயக்கப்படுகின்றன. 32 டிப்போக்கள் மூலம் கையாளப்படும் இந்த பேருந்துகளில் தினமும் 33.60 லட்சம் பேர் பயணம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நாளுக்கு நாள் சென்னையில் போக்குவரத்து தேவையும் அதிகரித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் திறக்கப்பட்டுள்ளதால், சென்னை உட்பட புறநகர் பகுதிகளில் இருந்து...
இது வெறும் அரசியல் வெற்றியை முன்வைக்கும் தேர்தல் அல்ல. தமிழ்மொழியை, தமிழகத்தை மதிக்கும் ஆட்சியை உருவாக்க வேண்டும் என்று தேர்தல் அறிக்கைக்கான கருத்துக் கேட்பு கூட்டத்தில் திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்தார். மக்களவை தேர்தலுக்கான பணிகளில் திமுக தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
தொகுதிப் பங்கீடு, தேர்தல் வியூகம் அமைத்தலுக்கான பணிகளை அதற்கென அமைக்கப்பட்ட குழுக்கள் மேற்கொண்டு வரும் நிலையில், கனிமொழி எம்.பி. தலைமையிலான திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவானது, மண்டலவாரியாக...
இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கு அனுமதிக்க வலியுறுத்தி தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பி.எட். பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்
admin - 0
இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கு அனுமதிக்க வலியுறுத்தி தகுதித்தேர்வு தாள் 1-ல் தேர்ச்சி பெற்ற பி.எட். பட்டதாரிகள் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம், கடந்த 2018-ல் பி.எட். பட்டதாரி ஆசிரியர்களை இடைநிலை ஆசிரியர்கள் பணிக்கு தகுதியானவர்கள் என்று அறிவித்த நிலையில், 2019, 2022 ஆசிரியர் தகுதித் தேர்வை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பி.எட் பட்டதாரி ஆசிரியர்கள் எழுதி தேர்ச்சி பெற்றனர். இதனிடையே, தேசிய ஆசிரியர்...
கோடை காலத்தில் ரூ.48 கோடிக்கு பால் உபபொருட்கள் விற்பனை செய்ய திட்டம்: அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
admin - 0
ஆவின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆவின் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தமிழ்நாடு பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை வகித்தார்.
பின்னர், நிருபர்களிடம் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதாவது: பால் உற்பத்தியாளர் களுக்கு 2 மாதங்களுக்கு முன்பு, ரூ.3 ஊக்கத் தொகைஅறிவிக்கப்பட்டது. இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு தற்போது வரை சுமார் ரூ.36 கோடியே 27 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில்...
மாநகர போக்குவரத்துக் கழகத்தில் விபத்தில்லாமல் பணிபுரிந்த 359 ஓட்டுநர்களுக்கு பாராட்டு சான்றிதழ்
admin - 0
மாநகர போக்குவரத்துக் கழகத்தில், 10 ஆண்டுகளுக்கும் மேலாகவிபத்தை ஏற்படுத்தாமல் பணிபுரிந்த 359 ஓட்டுநர்களுக்கு பரிசு,பாராட்டு சான்றிதழ்களை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் நேற்று வழங்கினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாநகர போக்குவரத்துக் கழகத்தில், கடந்த10 ஆண்டுகளுக்கும் மேலாக விபத்தில்லாமல் பணிபுரிந்த ஓட்டுநர்களுக்கு பரிசு, பாராட்டுசான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக விபத்தில்லாமல் பணிபுரிந்த மாநகர போக்குவரத்துக் கழகத்தைச்...
நீலகிரி, ஏற்காடு, கொடைக்கானல், கொல்லிமலை உட்பட மலைப் பகுதிகளில் மகளிர் அதிகளவில் இலவச பயணம் மேற்கொள்ளும்வகையில், அரசு நகர பேருந்துகளுக்கான எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு நகர பேருந்துகளில் மகளிர் இலவச பயணம் மேற்கொள்ளும் திட்டம் அமலில் உள்ளது. சமவெளி பகுதிகளில் நகர பேருந்துகளுக்கான எல்லை 35 கிமீ என உள்ள நிலையில், மலைப்பிரதேசங்களில் மிக குறைவான சுற்றளவில் மட்டுமே நகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதனால் மலைப்பகுதியில் வசிக்கும் மகளிர்...
சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி, மெட்ரோ ரயில்களில் அதிக முறை பயணம் செய்த 40 பயணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சென்னை மெட்ரோ ரயில்களில் சிங்கார சென்னை அட்டையைப் பயன்படுத்தி பயணம் செய்யும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், கடந்த ஆண்டு டிச.15-ம் தேதி முதல் இந்த ஆண்டு மார்ச் 15-ம் தேதி வரை 3 மாதங்களுக்கு ஒவ்வோரு மாதமும் அதிகமாக பயணம் செய்யும் முதல் 40 பயணிகளை தேர்வு செய்து,...
‘மூணாறிலிருந்து மெரினா வரை’ என்ற தலைப்பில் சுயசரிதை நூலை வெளியிட்டார் முன்னாள் டிஜிபி வால்டர் தேவாரம்
admin - 0
ஓய்வுபெற்ற டிஜிபி வால்டர் ஐ.தேவாரம், ‘மூணாறிலிருந்து மெரினா வரை’ என்ற தலைப்பில் தனது சுயசரிதை நூலை வெளியிட்டார். தமிழக காவல் துறையில் டிஜிபியாக இருந்து ஓய்வு பெற்றவர்வால்டர் ஐ.தேவாரம். பணிக் காலத்தில் சட்டம் - ஒழுங்கை கையாள்வதில் திறன் மிக்கவராக இருந்த இவர், சமூக விரோதிகள், குற்றவாளிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். இதன் காரணமாகவே, காவல் துறையில் பணிக்கு சேரும் பலரும் இவரை ரோல் மாடலாக ஏற்று தங்களது...
தமிழக அரசின் நிர்வாக சாதுரியத்தால் தலைசிறந்த மாநிலமாக தமிழகத்தை மாற்றியுள்ளோம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
admin - 0
திராவிட மாடல் ஆட்சியின் சாதுரியத்தால்தான் இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியிருக்கிறோம் என, தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.
தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் பெரு வெள்ளம் மற்றும் அதி கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, தூத்துக்குடி அருகேயுள்ள சூசைபாண்டியாபுரம் பகுதியில் நேற்று நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தலைமை வகித்தார். சட்டப்பேரவை தலைவர்அப்பாவு, அமைச்சர்கள் பெ.கீதாஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், கனிமொழி...
ஆந்திராவில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை: முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று அடிக்கல் நாட்டுகிறார்
admin - 0
ஆந்திர மாநிலம் பாலாற்றின் குறுக்கே ஏற்கெனவே 22 தடுப்பணைகளை அந்த மாநில அரசு கட்டியுள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு புதிய தடுப்பணை கட்ட இன்று (பிப்.26) முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அடிக்கல் நாட்ட உள்ளார். இது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயல் எனத் தமிழக விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.ஆந்திர மாநில வனத்துறை அமைச்சர் நேற்று குப்பத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, "ரெட்டி குப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே புதிய...










