வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கான உதவித்தொகை அடுத்த ஆண்டுமுதல் உயர்த்தப்படும்: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவிப்பு
admin - 0
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறைசார்பில், வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு மாதம்தோறும் ரூ.3,500 உதவித்தொகையும், மருத்துவ படியாக ரூ.500-ம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்கடந்த 2022-2023-ம் ஆண்டில் உதவித்தொகை பெற தேர்வுசெய்யப்பட்ட 100 பேருக்கு உதவித் தொகை பெறுவதற்கான ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சி சென்னை பல்கலை.யில் நேற்று நடந்தது.
இதில் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார். அவர் பேசும்போது, ‘‘அடுத்த ஆண்டுஇந்த உதவித்தொகை உயர்த்தி...
கருணாநிதி உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம்: 17-ம் தேதி மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் வெளியிடுகிறார்
admin - 0
மறைந்த முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா அரசு சார்பிலும், திமுக சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் கொண்டாடப்பட்டு வருகிறது. நூற்றாண்டை முன்னிட்டு, பல்வேறு திட்டங்களையும் தமிழக அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில், கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு, அவரது உருவம் பொறிக்கப்பட்ட நாணயத்தை வெளியிட மத்திய அரசு ஒப்புதல் அளித்து, கடந்த ஜூன் 4-ம் தேதி ரூ.100 மதிப்பிலான நாணயம் வெளியிடப்பட்டது.இந்த நாணயத்தை அதிகாரப்பூர்வமாக ஆக.17-ம் தேதி சென்னை...
ஜெய்ஸ்ரீ ராம், முருகனுக்கு அரோகரா என அடுத்த தேர்தலுக்கு முன்பாக ஸ்டாலின் சொல்வார்: அண்ணாமலை விமர்சனம்
admin - 0
அடுத்த தேர்தலுக்கு முன்பாக ஜெய்ஸ்ரீராம், முருகனுக்கு அரோகரோ என முதல்வர் ஸ்டாலின் சொல்வார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில், தென்னிந்திய மீனவர் பேரவை தலைவர் ஜெய பாலையன் தலைமையில், துணைத் தலைவர்கள் ராம், கஜபதி மற்றும் பேரவையின் நிர்வாகிகள் பலர் பாஜகவில் நேற்று இணைந்தனர். அப்போது செய்தியாளர்களிடம் அண்ணாமலை...
கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய 9 மாவட்டங்களில் இன்று (ஆக. 7) ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், கடலோர மாவட்டங்களில் சில இடங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது....
தமிழகத்தில் அரசு, பொதுத் துறைகளில் ஒப்பந்தமுறை படிப்படியாக அரங்கேற்றம்: பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு
admin - 0
தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) சார்பில், ‘தனியார்மயம், ஒப்பந்தமுறை எதிர்ப்பு’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடைபெற்றது.
சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராசன் தலைமையில் நடந்த இக் கருத்தரங்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது: மருத்துவர்கள், கல்லூரி மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள்கூட இன்றைக்கு ஒப்பந்த ஊழியர்களாகப் பணியமர்த்தப்படுகின்றனர். இப்படி தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் பொதுத்துறைகளில் ஒப்பந்த முறை படிப் படியாக...
பழங்குடியினர் நலனுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்காதது ஏன்? – தமிழக அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
admin - 0
தமிழகத்தில் பழங்குடியினர் நலனுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்காதது ஏன் என்பது தொடர்பாக, தமிழக அரசு விளக்கம் அளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த மல்லிகா, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
நானும், எனது கணவரும் காட்டுநாயக்கன் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். எங்களுக்கு 5 குழந்தைகள் உள்ளனர். அவர்களின் கல்விக்காக சாதிச் சான்றிதழ் கோரி விண்ணப்பித்தோம். எங்களின் சமூகத்தை உறுதி செய்வதற்காக, ரத்த வழி...
இலவச வேட்டி, சேலை, பள்ளி சீருடைகள் உரிய நேரத்தில் விநியோகம் செய்யப்படுகிறது: பழனிசாமிக்கு அமைச்சர் காந்தி பதில்
admin - 0
மாணவர்களுக்கான சீருடை, பொங்கலுக்கான இலவச வேட்டி,சேலை உரிய நேரத்தில் வழங்கப்படுவதாகவும், உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட வேண்டாம் என்றும் எதிர்க் கட்சித்தலைவர் பழனிசாமிக்கு அமைச்சர் ஆர்.காந்தி பதிலளித்துள்ளார்.
இலவச வேட்டி சேலை திட்டம் மற்றும் மாணவர்களுக்கு நான்கு இணை இலவச சீருடைகள் வழங்கும் திட்டங்களில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி சமீபத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தார். இவற்றுக்கு பதிலளித்து கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வெளியிட்ட...
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஞானேஸ்வரன் தாக்கல்செய்துள்ள மனுவில், "கூகுள்தளத்தில் தவறான நபர்கள்ஆபாச இணையதளங்களுக்கான பரிந்துரைகளாக விளம்பரப்படுத்துகின்றனர். இந்த ஆபாசப்புகைப்படங்கள் கொண்ட விளம்பரங்கள் இணையதளத்தை பயன்படுத்துவோருக்கு மன பாதிப்பைஏற்படுத்துகிறது. மேலும், குழந்தைகள் தவறான பாதைக்கு செல்லும் அபாயம் இருக்கிறது" என்று கூறியிருந்தார்.
உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், நீதிபதி பாலாஜி ஆகியோர்கொண்ட முதல் அமர்வானது கூகுள் நிறுவனமும், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகமும் இதுகுறித்து 2...
வீட்டு கட்டிட வரைபட அனுமதிக்கான கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்: அரசியல் தலைவர்கள் வலியுறுத்தல்
admin - 0
வீட்டு கட்டிட வரைபட அனுமதி கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என தமிழக அரசை அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளின் விவரம் வருமாறு:
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: திமுக அரசின் இந்த நடவடிக்கைகள் காரணமாக பாதிக்கப்படுவது ஏழை எளிய, நடுத்தர மக்கள் தான். இந்தக் கட்டண உயர்வு அனைத்தையும், பொதுமக்கள் மீது சுமத்துவதைத் தவிர கட்டுமான நிறுவனங்களுக்கு வேறு வழி இல்லை....
ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கும் தொகுதி செயலாளர், தலைவர் விரைவில் நியமனம்: ராமதாஸ் அறிவிப்பு
admin - 0
பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாமகவின் களச் செயல்பாடு களை தீவிரப்படுத்தும் வகையில், ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் தலா ஒருதொகுதி செயலாளர், தொகுதிதலைவரை நியமிக்க கட்சித் தலைமை தீர்மானித்திருக்கிறது. இதுகுறித்த அறிவிப்பும், நியமனங்களும் விரைவில் வெளியிடப்படும்.
மாவட்ட செயலாளர் மாவட்ட அளவில் கட்சியின் பிரதிநிதியாகசெயல்படுவார். உறுப்பினர் சேர்க்கை, கட்சி அமைப்புகளை வலுப்படுத்தல் பணிகளை மேற்கொள்வார். கட்சித் தலைமை அறிவிக்கும் போராட்டங்கள், நிகழ்ச்சிகளை மாவட்ட அளவில் ஏற்பாடு...










