வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கான உதவித்தொகை அடுத்த ஆண்டுமுதல் உயர்த்தப்படும்: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவிப்பு

0
163

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறைசார்பில், வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு மாதம்தோறும் ரூ.3,500 உதவித்தொகையும், மருத்துவ படியாக ரூ.500-ம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்கடந்த 2022-2023-ம் ஆண்டில் உதவித்தொகை பெற தேர்வுசெய்யப்பட்ட 100 பேருக்கு உதவித் தொகை பெறுவதற்கான ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சி சென்னை பல்கலை.யில் நேற்று நடந்தது.

இதில் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார். அவர் பேசும்போது, ‘‘அடுத்த ஆண்டுஇந்த உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும். எல்லை காவலர்கள் மற்றும் தமிழறிஞர்கள் மரணம் அடையும்போது அவர்களின் ஈம செலவுக்கென ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது.அடுத்த ஆண்டு இந்த தொகையும் உயர்த்தி வழங்கப்படும்.அதோடுவயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கும் இத்தொகை வழங்கப்படும்’’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here