எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு எதிரான வழக்கு; விசாரணை நடத்த ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை: நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
admin - 0
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு எதிரான சொத்து குவிப்புக் வழக்கு விசாரணைக்கு, தமிழக ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கரூர் குன்னம்பட்டியில் 22 ஏக்கர் நிலத்தை, அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் சேகர் உள்ளிட்டோர் மோசடி செய்ததாக, குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் அளித்த புகாரின்பேரில், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சேகர் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது....
கள்ளச்சாராய வழக்கில் விசாரணை முடிந்துள்ளதால் சிபிஐ-க்கு மாற்ற தேவையில்லை: நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்
admin - 0
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 70-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி அதிமுக சார்பில் வழக்கறிஞர் ஐ.எஸ். இன்பதுரை, பாமக சார்பில் வழக்கறிஞர் கே.பாலு மற்றும் பாஜக சார்பில் வழக்கறிஞர் ஏற்காடு ஏ.மோகன்தாஸ் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்குகள் மீதான விசாரணை பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது....
அனைவருக்கும் கல்வி திட்டத்துக்கான ஜூன் மாத நிதியை மத்திய அரசு வழங்கவில்லை: அமைச்சர் அன்பில் மகேஸ்
admin - 0
அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கு ஜூன் மாதம் வழங்க வேண்டிய நிதியை கொடுக்காததால் பல லட்சம் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க முடியவில்லை. திட்டங்களுக்கான நிதியை ஒதுக்கிய பிறகு அதனை வழங்க நிபந்தனைகள் விதிப்பது சரியல்ல என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது: பள்ளிக்கல்வித்துறையில் கடந்த ஆண்டுக்கான அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கான...
யூடியூபர் சவுக்கு சங்கர் தனக்கு எதிராக பதியப்பட்டுள்ள அனைத்து வழக்குகள் மற்றும் இரண்டாவது முறையாக மீண்டும் குண்டர் தடுப்புச்சட்டத்தில் சிறையில் அடைத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி மனுக்கள் தாக்கல் செய்திருந்தார்.
இதன் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதிடி.ஒய்.சந்திரசூட், ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹ்தகி, சவுக்குசங்கர் நீதிபதிகளுக்கு எதிராகவும்கூட அவதூறு கருத்துக்களை பரப்பியவர்....
சர்வதேச அரசியல் கல்வி பயிலஅண்ணாமலை லண்டன் சென்றநிலையில், கட்சிப் பணிகளை கவனிக்க, தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா தலைமையில் 6 உறுப்பினர்கள் கொண்ட ‘தமிழக பாஜக ஒருங்கிணைப்புக் குழு’ அமைக்கப்பட்டுள்ளது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சர்வதேச அரசியல் கல்வி பயிலுவதற்காக 28-ம் தேதி லண்டன் புறப்பட்டுச் சென்றார். அங்கு 3 மாதம் தங்கியிருந்து, புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் தொடர்பான படிப்பை மேற்கொள்ள இருக்கிறார். இதற்காக, பாஜக...
செப்.11, 14, 15-ம் தேதிகளில் விநாயகர் ஊர்வலம் நடத்தலாம்: சிலைகளை கடலில் கரைக்க 4 இடங்களில் அனுமதி
admin - 0
சென்னையில், விநாயகர் சிலைகளை செப். 11, 14, 15 ஆகிய தேதிகளில் ஊர்வலமாக எடுத்துச் சென்று 4 இடங்களில் கடலில் கரைக்க போலீஸார் அனுமதி வழங்கி உள்ளனர். விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் 7-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் இந்து அமைப்புகள், தன்னார்வலர்கள் மற்றும் குடியிருப்பு வாசிகள் உட்பட பல்வேறு தரப்பினர் விநாயகர் சிலைகளை நிறுவி, அதை வழிபட்டு வணங்குவார்கள்.
பின்னர், ஒருவார காலம் சிறப்பு...
அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலினுக்கு இந்திய துணை தூதர் ஸ்ரீகர் ரெட்டி, மற்றும் அமெரிக்கா வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தமிழகத்துக்கு அதிக அளவில் முதலீடுகளை ஈர்க்கவும், படித்த இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், மேலும் பல புதிய தொழில்களை தமிழகத்தில் உருவாக்கும் முயற்சியாகவும், முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சென்னையில் இருந்து கடந்த 27-ம் தேதி இரவு விமானத்தில் புறப்பட்ட அவர், அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ மாகாணத்துக்கு...
உணவு பாதுகாப்பு துறையில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்கிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்
admin - 0
மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் மூலமாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 127 உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கும் நிகழ்வு ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில் நேற்று நடந்தது.
இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:
தமிழகத்தில் மொத்தம் 391 உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பணியிடங்கள் உள்ளன. இவற்றில் ஏற்கெனவே...
நெடுஞ்சாலை துறை மறுசீரமைப்பு ஆய்வு செய்து அறிக்கை தர 5 அதிகாரிகள் கொண்ட குழு: தமிழக அரசு ஆணை
admin - 0
தமிழக நெடுஞ்சாலைத் துறைசெயலர் ஆர்.செல்வராஜ் வெளியிட்ட அரசாணை:
‘நெடுஞ்சாலைத் துறையின் செயல்பாட்டை மேம்படுத்தும் வகையில், தற்போது உள்ள சிலஅலகுகள் மாற்றி அமைக்கப்படும். செயல் திறனை மேம்படுத்த, இத்துறை மறு சீரமைக்கப்படும். நிபுணத்துவம் வாய்ந்தபொறியாளர்களுடன் பாலங்கள்சிறப்பு அலகு உருவாக்கப்படும்’என்று சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு அறிவித்திருந்தார்.
இதையடுத்து, நெடுஞ்சாலை துறையில் தற்காலிக பணியிடங்களை நிரந்தரம் செய்வது குறித்தும்5 ஆண்டுகளுக்கு மேல் காலியாகஉள்ள பணியிடங்களின் தேவைகுறித்து பரிசீலிக்கவும், அமைச்சரின் அறிவிப்புகள் தொடர்பாகவும் விரிவாக ஆய்வு செய்து...
நிலவுரிமை காக்க போராடும் ஏகனாபுரம் மக்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டு உள்ளதற்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் 4,550 ஏக்கர் பரப்பளவில் புதிய விமான நிலையம் அமைப்பதற்காக, ஏகனாபுரம் உள்பட 13-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஏராளமான விளைநிலங்களையும், நீர்நிலைகளையும், குடியிருப்பு நிலங்களையும் கையகப்படுத்தும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்கு...










