Google search engine
தன்னுடைய நீட் விடைத்தாள் கிழிந்துவிட்டதாகவும் இதனால், தனக்கான தேர்வு முடிவு முறையாக அறிவிக்கப்படவில்லை என்றும் மாணவி ஆயுஷி படேல் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கான ஆவணங்களை இணைத்த அவர், தன்னுடைய விடைத்தாளை கணினி மூலம் இல்லாமல் கைப்பட திருத்த வேண்டும் என்றும் தன் மனுவில் கோரி இருந்தார். இதுதொடர்பாக தேசிய தேர்வு முகமை பதில் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அம்மாணவியின் விடைத் தாள் தொடர்பான...
காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் கடந்த 10-ம் தேதி பேருந்தில் சென்ற பக்தர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 9 பேர் உயிரிழந்தனர், தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டனர். மறுநாள் தோடா மாவட்டத்தின் பாதர்வா என்ற இடத்தில் உள்ள சோதனைச் சாவடி மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் பாதுகாப்பு படையினர் 5 பேர் காயம் அடைந்தனர். தாக்குதல் நடத்திய 4 தீவிரவாதிகள் தோடா...
ஜெகன் ஆட்சியில் விசாகப்பட்டினத்தின் ரிஷிகொண்டா மலைப் பகுதியில், அரசுப் பணம் ரூ. 500 கோடி செலவில் 7 சொகுசு பங்களாக்களை ரகசியமாக கட்டியுள்ளனர். இதில் ஒவ்வொரு கழிவறையும் ரூ.1 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரான ஜெகன்மோகன் ரெட்டி விசாகப்பட்டினத்தை தலைநகரமாக்க முயற்சித்தார். இதனால், அப்போதைய அமைச்சர் ரோஜாவின் தலைமையில், சுற்றுலா வளர்ச்சி கழகம்சார்பில், விசாகப்பட்டினத்தில் உள்ள ரிஷிகொண்டா எனும் இடத்தில் இருந்த மிக அழகான மலையின்...
கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் டி.வீணா ‘எக்ஸாலாஜிக்’ என்ற ஐடி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதற்கிடையில் கொச்சியில் உள்ள ‘கொச்சின் மினரல்ஸ் அண்டு ரூடைல் லிமிடெட்’ (சிஎம்ஆர்எல்) என்று கனிம நிறுவனத்துக்கு கேரள அரசு சுரங்க அனுமதி வழங்கியது. இதற்கு லஞ்சமாக ஒவ்வொரு மாதமும் அந்த நிறுவனம் வீணாவின் எக்ஸாலாஜிக் நிறுவனத்துக்கு பணம் கொடுப்பதாக காங்கிரஸ் எம்எல்ஏ மேத்யூ குழல்நாடன் குற்றம் சாட்டினார். மேலும் இதுகுறித்து நீதிமன்ற...
ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக பதவியேற்ற பின், ஆந்திர மாநில சட்டப்பேரவை கூட்டம் வரும் 21-ம் தேதிமுதல் முறையாக தொடங்க உள்ளது. ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக முதல்வராக பதவியேற்றார். இந்நிலையில் வரும் 21 மற்றும் 22 ஆகியஇரு நாட்களும் ஆந்திர சட்டப்பேரவை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், அனைத்து கட்சி எம்.எல்.ஏக்களும் பதவி ஏற்க உள்ளனர். மேலும், சபாநாயகராக அய்யண்ண பாத்ருடு தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்....
டெல்லி மகளிர் ஆணைய தலைவராக 8 ஆண்டுகளுக்கு மேல் பதவி வகித்தவர் ஸ்வாதி மாலிவால்.இவர் கடந்த ஜனவரி மாதம் ஆம்ஆத்மி கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வானார். இவர் ராகுல், சரத் பவார்,உத்தவ் தாக்கரே, அகிலேஷ் யாதவ் உட்பட இண்டியா கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது: டெல்லி மகளிர் ஆணைய தலைவராக நான் பதவி வகித்த காலத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்...
ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவில் பிளேடு இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. கடந்த வாரம் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த ஒருவர் தனக்கு அளிக்கப்பட்ட உணவில் பிளேடு கிடந்ததாக புகார் தெரிவித்திருந்தார். இது குறித்து மதுரஸ் பால் என்ற அந்தப் பயணி வெளியிட்ட எக்ஸ்பதிவில், “ஏர் இந்தியாவில் வழங்கப்பட்ட உணவில் பிளேடு போன்றவெட்டக்கூடிய உலோகத் துண்டுகிடந்தது. வறுத்த உருளைக்கிழங்கு மற்றும் அத்திபழ சாட்டில்...
வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டு ரேபரேலி தொகுதியை தக்கவைத்துக் கொள்ள ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார். வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இந்நிலையில், இது குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் உறுப்பினரும், உத்தர பிரதேசத்தை சேர்ந்தவருமான ஆச்சாரிய பிரமோத் கிருஷ்ணம் கருத்து தெரிவித்துள்ளார். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், எனவே அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்...
பிரதமர் மோடி தலைமையில் அமைந்துள்ள ஆட்சி கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் நிலைத்து நீடிக்க கடுமையாக போராட வேண்டி இருக்கும் என காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகத்துக்கு அவர் அளித்தப் பேட்டியில், “நாட்டில் வெறுப்பைப் பரப்பலாம், அதன் மூலம் ஆதாயம் பெறலாம் என்ற எண்ணத்தை இந்திய மக்கள் இந்தத் தேர்தலில் நிராகரித்துவிட்டனர். தேர்தல் முடிவுகள் அதை தான் சுட்டிக்காட்டுகிறது. பிரதமர் மோடிக்கு கடந்த 2014 மற்றும்...
காவிரி ஒழுங்காற்று குழுவின் 97-வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியன் நேரடியாக கலந்துகொண்டார். ஒழுங்காற்று குழுவின் செயலாளர் டி.டி.ஷர்மா, உறுப்பினர் கோபால் ராய், கர்நாடகா, கேரளா,புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் நீர்வளத்துறை அதிகாரிகளும், வானிலை ஆய்வு மைய நிபுணர்களும் காணொலி வாயிலாக கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தின் தொடக்கத்தில் 4 மாநிலங்களில் காவிரி நீர்ப்பிடிப்பு...