கர்நாடக மாநிலத்தில் கடந்த இருமாதங்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநிலம் முழுவதும் 25 ஆயிரத்து 589 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறுகையில், ‘‘கர்நாடகாவில் டெங்கு காய்ச்சலை தொற்று நோயாக அறிவித்துள்ளது. வீடுகளில் சுகாதாரத்தை பேணாதவர்களிடம் அபராதம் விதிக்கும் வகையில் கர்நாடக தொற்று நோய் தடுப்பு சட்டம் திருத்தம் செய்யப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இதன்படி...
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தியை மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா, வீராங்கனை வினேஷ் போகத் உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர்.
இந்தியாவின் தலைசிறந்த மல்யுத்த வீராங்கனையாக இருப்பவர் வினேஷ் போகத். இவர் அண்மையில் நடைபெற்று முடிந்த பாரிஸ் ஒலிம்பிக் இறுதிப் போட்டிக்குமுன்னேறிய நிலையில் 100 கிராம் கூடுதல் எடை இருந்ததாகக் கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதன்பின் மல்யுத்த விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக வினேஷ்...
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் காலின்ஸ் கவுன்டி பகுதியில் அன்னா என்ற நகரம் உள்ளது. இந்த நகரிலுள்ள சாலையில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை பயங்கர விபத்து நடந்துள்ளது. சாலையில் வேகமாக வந்த லாரி மீது மோதாமல் இருக்க எதிரே வந்த கார் டிரைவர் ஒருவர் வாகனத்தைத் திருப்பியுள்ளார். இதனால் அந்தக் காரின் பின்னால் வந்த...
காங்கிரஸ் மேலிட முடிவுக்கு கட்டுப்படுவேன்: முதல்வரை மாற்றும் விவகாரத்தில் சித்தராமையா அறிவிப்பு
admin - 0
கர்நாடக முதல்வர் சித்தராமையாமீது வழக்குப் போடப்பட்டிருப்பதால் கட்சி மேலிடம் அவரை மாற்றப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு சித்தராமையா, கட்சி மேலிடமும் எம்எல்ஏக்களும் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாக அறிவித்துள்ளார்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது மனைவிபார்வதிக்கு மாற்று நிலம் ஒதுக்கிய விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அவர் மீது வழக்குப் பதிவு செய்ய அனுமதி அளித்தார். இதனால் சித்தராமையா தனது முதல்வர் பதவியை...
ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட கொல்கத்தா ஆர்.ஜி கர்மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷை 8 நாள் சிபிஐ காவலில் விசாரிக்க கொல்கத்தா நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
கொல்கத்தா ஆர்.ஜி. கர்மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்குஉட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாகஅதன் முதல்வராக இருந்த சந்தீப்கோஷிடம் ஏற்கெனவே உண்மைகண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் அவர் மீது நிதி முறைகேடு குற்றச்சாட்டுகளை மருத்துவமனையின்...
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, கே.சி. வேணுகோபால் ஆகியோரை நேற்று டெல்லியில் சந்தித்துப் பேசினார். அப்போது, சட்டப்பேரவை தேர்தல் வியூகம்தொடர்பாக அவர்கள் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஹேமந்த் சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது: மகாராஷ்டிராவுடன் ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கும் சேர்த்து தேர்தல் தேதி குறித்தஅறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்றஎதிர்பார்ப்பு நிலவுகிறது....
தமிழ்நாடு அரசின் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் (Tamil Virtual Academy) முயற்சியால் ஜெர்மனியில் தமிழ் வகுப்புகள் நடைபெறுகின்றன. இதன்மூலம், ஜெர்மனியில்வாழும் தமிழ் குடும்பங்கள் பலன் பெறுகின்றன.
தமிழகத்திற்கு வெளியே பிற மாநிலங்கள், வெளிநாடுகள் என உலகம் முழுவதிலும் தமிழர்கள் வாழ்கின்றனர். இவர்களின் பிள்ளைகளுக்கு அவர்கள் வாழும் பகுதியில் தமிழ்க் கல்வி பெறுவது எளிதாக இல்லை. இந்தப் பிரச்சினை அவர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு அரசின் தமிழ்...
உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்தவர்சன்னிகுமார்(18). 12-ம் வகுப்பு படித்து வந்த இவர் பள்ளி நேரம் முடிந்ததும் சமோசா கடைநடத்தி விற்பனை செய்து வந்தார். அதே நேரத்தில்எம்பிபிஎஸ் படிப்பில் சேர ஆசைப்பட்ட சன்னிகுமார், சமோசா விற்றுக்கொண்டு நீட் தேர்வுக்கும் தயாராகி வந்தார். கடந்த மே மாதம்சன்னிகுமார் நீட் தேர்வு எழுதினார்.
அதன் முடிவுகள் வெளியான நிலையில்அவர் 664 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். சமோசா கடையில் தினமும் 5 மணி...
கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலை சம்பவம்: மூத்த வழக்கறிஞர் கபில் சிபலுக்கு ஜெகதீப் தன்கர் கடும் கண்டனம்
admin - 0
கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் படுகொலை சம்பவத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த வழக்கில் மம்தா பானர்ஜி அரசு சார்பில் வாதாடுபவர் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல். இவர் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவராகவும் உள்ளார்.பெண் மருத்துவர் கொலை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து வழக்கறிஞர் சங்கம் நிறைவேற்றிய தீர்மானத் தில், ‘‘இச்சம்பவம் அடிக்கடி நடைபெறும் சம்பவம்’’ என குறிப்பிடப்பட்டிருந்தது. இதை உத்தரகாண்ட்மாநிலம் ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று...
உலகின் டாப்-10 சுற்றுலா மையங்களில் ஒன்றாக இந்தியா மாறும்: மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் நம்பிக்கை
admin - 0
மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் 7.9 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக உயரும்.மேலும், உலகின் உள்ள 10 சுற்றுலாமையங்களில் இந்தியாவும் ஒன்றாக மாறும். இதற்கான பணிகளைமத்திய சுற்றுலாத்துறை முன்னெடுத்து உள்ளது.
மத்திய அரசு - தனியார் நிறுவனஒத்துழைப்புடன் (பிபிபி) சுற்றுலாத்துறையில் மிகப்பெரிய முதலீடுகளை மத்திய சுற்றுலாத்துறை எதிர்பார்த்து வருகிறது. இதன்மூலம் சுற்றுலாத்துறை மிகப்பெரிய வளர்ச்சியை எட்டும் என்று...










