Google search engine
சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெகதீஷ் டைட்லர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1984-ம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் சீக்கியர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள்நடைபெற்றன. இந்த கலவர வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெகதீஷ் டைட்லர், கமல்நாத், சஜ்ஜன் குமார் உள்ளிட்டோர் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். இந்த வழக்கில் சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனையை டெல்லி உயர்...
மணிப்பூரில் மைத்தேயி இனத்த வருக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் மணிப்பூரில் குகி மற்றும் மைத்தேயி இனத்தவர் இடையே கடந்தாண்டு மே மாதம் பயங்கர கலவரம் ஏற்பட்டது. இந்நிலையில் குகி இன பிரதிநிதிகள் டெல்லியில் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில், ‘‘குகி இனத்தவருக்கு சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசத்தை உருவாக்க வேண்டும்.இது மட்டுமே பிரச்சினையில் இருந்து விடுபடும் ஒரே...
தொழில்நுட்ப பராமரிப்புப் பணிக்காக பாஸ்போர்ட் சேவா தளம், ஆகஸ்ட் 29-ம் தேதி இரவு 8 மணி முதல் செப்டம்பர் 2-ம் தேதி காலை 6 மணி வரை பயன்பாட்டில் இருக்காது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த 3 நாட்களில் விண்ணப்ப பரிசீலனை, அப்பாய்ன்மென்ட் உள்ளிட்ட சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம், “தொழில்நுட்ப பராமரிப்பு காரணமாக பாஸ்போர்ட் சேவா தளம் ஆகஸ்ட் 29-ம் தேதி இரவு...
முஸ்லிம் சமூகத்தினர் திருமணம் மற்றும் விவாகரத்தை கட்டாயம் பதிவு செய்ய வகைசெய்யும் மசோதா அசாம்சட்டப்பேரவையில் நேற்றுநிறைவேறியது. அசாம் சட்டப்பேரவையில் ‘முஸ்லிம் திருமணங்கள், விவாகரத்துகள் கட்டாயப் பதிவு மசோதா’ கடந்த செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது. மாநில வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் ஜோகன் மோகன் இதனை அறிமுகம் செய்தார். இந்த மசோதா மீதான கேள்விகளுக்கு முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா பதில்அளிக்கும்போது, “அசாமில் முஸ்லிம்களுக்கு காஜிக்கள் நடத்தி வைக்கும் திருமணங்கள் பதிவு...
தொழில்நுட்ப பராமரிப்புப் பணிக்காக பாஸ்போர்ட் சேவா தளம், ஆகஸ்ட் 29-ம் தேதி இரவு 8 மணி முதல் செப்டம்பர் 2-ம் தேதி காலை 6 மணி வரை பயன்பாட்டில் இருக்காது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த 3 நாட்களில் விண்ணப்ப பரிசீலனை, அப்பாய்ன்மென்ட் உள்ளிட்ட சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம், “தொழில்நுட்ப பராமரிப்பு காரணமாக பாஸ்போர்ட் சேவா தளம் ஆகஸ்ட் 29-ம் தேதி இரவு...
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின்மாநிலங்களவை உறுப்பினர்களான எம். வெங்கட ரமணா, பி. மஸ்தான் ராவ் ஆகிய இருவரும் நேற்று காலை டெல்லியில் துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கரிடம் தங்களது ராஜினாமா கடிதங்களை நேரில் வழங்கினர். இது உடனடியாக ஏற்கப்பட்டது. இவர்கள் இருவரின் ராஜினாமாவை தொடர்ந்து ஜெகன் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 9-ஆக குறைந்துள்ளது. இதில் வெங்கட ரமணாவின் பதவிக்காலம் 2026 வரையிலும், மஸ்தான் ராவின் பதவிக்காலம் 2028 வரையிலும் உள்ளது....
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் தெலங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளும், மேலவை உறுப்பினருமான கவிதா நிபந்தனை ஜாமினில் சமீபத்தில் வெளியே வந்தார். இதுகுறித்து பலர் விமர்சனம் செய்து வரும் நிலையில், தெலங்கானா மாநில முதல்வர்ரேவந்த் ரெட்டியும் விமர்சித்துள்ளார். இது குறித்து ரேவந்த் ரெட்டி கூறுகையில், ”நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜகவுடன் பி.ஆர்.எஸ். கட்சி ரகசிய கூட்டணி வைத்துக்கொண்டு செயல்பட்டது. இதனை நாங்கள் பல...
ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 47-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி பேசியதாவது: இந்த நிகழ்வின் தொடக்கமாக, தொலைநோக்கு பார்வை கொண்ட நமது பிரதமர் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றதற்கு அன்புடன் வாழ்த்துவோம். இது, நாட்டின் ஸ்திரத்தன்மை, துடிப்பான ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி. இந்த தேர்தல் முடிவு உலகளவில் இந்தியாவின் நற்பெயரை உயர்த்த உதவியுள்ளது. அதுமட்டுமின்றி, நமது பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கான வாய்ப்புகளையும்...
ஆந்திர மாநிலம் அமராவதியில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுடன் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: ஆந்திராவில் ஒவ்வொரு கோயிலிலும் ஆன்மிகம் செழித்தோங்க வேண்டும். கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் பணத்தை பறிக்காமல் அவர்கள் மீண்டும், மீண்டும் அக்கோயிலுக்கு வரும் வகையில் ஆன்மிக நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். கோயில்கள் மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் மிகவும்தூய்மையாக இருப்பது அவசியம்.ஆந்திராவில் பல முக்கிய கோயில்கள் வனப்பகுதியில் இருப்பதால் சுற்றுலாத்...
 உத்தர பிரதேசத்தில் கொண்டுவரப்பட்ட புதிய சமூக ஊடக கொள்கைக்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் போன்ற சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவல்களை ஒழுங்குப்படுத்தும் நோக்கத்தில் இந்த புதிய கொள்கை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் கண்டனத்துக்குரிய தகவல்களை பதிவிட்டால் நடவடிக்கை பாயும்.தேசத் விரோத தகவல்களை பதிவிட்டால் 3 ஆண்டுகள் முதல் ஆயுள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். ஆபாசம் மற்றும் அவதூறு தகவல்களை...