காஷ்மீரில் தீவிரவாதிகள் பற்றி தகவல் தெரிவிக்காத 3 பேர் கைது

0
121

காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் கடந்த 10-ம் தேதி பேருந்தில் சென்ற பக்தர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 9 பேர் உயிரிழந்தனர்,

தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டனர். மறுநாள் தோடா மாவட்டத்தின் பாதர்வா என்ற இடத்தில் உள்ள சோதனைச் சாவடி மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் பாதுகாப்பு படையினர் 5 பேர் காயம் அடைந்தனர்.

தாக்குதல் நடத்திய 4 தீவிரவாதிகள் தோடா மாவட்டத்தின் பாதர்வா பகுதியில் ஜாய் என்ற இடத்தில் கடந்த சில நாட்களாக சுற்றித் திரிந்துள்ளனர். அப்போது அவர்கள் அங்கு ஆடு, மாடு மேய்ப்பவர்களிடம் இருந்து துப்பாக்கி முனையில் உணவை பறித்துச் சென்றுள்ளனர்.

ஆனால், அவர்கள் இது பற்றி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கவில்லை. இதற்காக 17 வயது சிறுவன் உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.