மேற்கு வங்கத்தில் ஜூன் 1 முதல் பெண்களுக்கு இலவச பேருந்து சேவை

0
18

மேற்கு வங்க மாநிலத்தில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணத் திட்டம் ஜூன் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று மாநில அரசு அறிவித்தது.

மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின் போது, பெண்களுக்கு ஏராளமான திட்டங்களை பாஜக கூறியிருந்தது. மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. பாஜக அமோக வெற்றி பெற்று சுவேந்து அதிகாரி முதல்வராகப் பதவியேற்றார். அதன் பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அவர் எடுத்து வருகிறார்.

இந்நிலையில், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் மேற்கு வங்கத்தில் ஜூன் 1-ம் தேதி முதல் பெண்களுக்கு இலவச பேருந்து பயணத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, மாநில அரசு பேருந்துகளில் குறைந்த தூரம் மற்றும் நீண்ட தூரம் என அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்று போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

இதன் மூலம் பெண்களுக்கு அதிகாரம் மற்றும் அவர்களுடைய போக்குவரத்து மேம்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும், இலவச பயணத்துக்காக பெண்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். இந்த கார்டு பெறுவதற்கு அவரவர் பகுதிகளில் உள்ள பிடிஓ அல்லது எஸ்டிஓ.விடம் விண்ணப்பம் அளிக்க வேண்டும். அதன் பின் விண்ணப்பிக்கும் பெண்ணின் புகைப்படம், பெயர் அடங்கிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.

அதைப் பயன்படுத்தி மாநிலம் முழுவதும் எங்கு வேண்டுமானாலும் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம். இந்த கார்டு பெறுவதற்கு ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ஆயுஷ்மான் பாரத் சுகாதார அட்டை போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஸ்மார்ட் கார்டு பெறும் வரையில் தற்காலிகமாக பெண்கள் தங்கள் அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்றை ஆதாரமாகக் காட்டி இலவசமாகப் பேருந்துகளில் பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here