சபரிமலை கோயில் தங்கத்தை திருடியவர்கள் தப்ப முடியாது: கேரள அமைச்சர் திட்டவட்டம்

0
16

கேரள தேவஸ்​வம் துறை அமைச்​சர் கே.முரளிதரன் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: சபரிமலை ஐயப்​பன் கோ​யிலுக்கு சொந்​த​மான தங்​கம் காணா​மல் போனது தொடர்​பாக அமைக்​கப்​பட்​டுள்ள சிறப்​புப் புல​னாய்​வுக் குழு​வின் (SIT) அறிக்​கைக்​காக காத்​திருக்​கிறோம்.

அந்த அறிக்கை கிடைத்​தவுடன் அடுத்​தகட்ட நடவடிக்​கைகள் உடனடி​யாகத் தொடங்​கும். கடவுள் சொத்​தைக் கொள்​ளை​யடித்த எவரும் சட்​டத்​தின் பிடி​யில் இருந்து தப்ப முடி​யாது.

எபோலா வைரஸ் தொற்று குறித்து கேரள மக்​கள் அச்​சப்​படத் தேவை​யில்​லை. இந்​தி​யா​வில் இது​வரை எபோலா பாதிப்பு எது​வும் கண்​டறியப்​பட​வில்​லை.

வெளி​நாடு​களில் இருந்து வருபவர்​களைக் கண்​காணிக்க விமான நிலை​யங்​கள் மற்​றும் துறை​முகங்​களில் தீவிரப் பரிசோதனை முறை​கள் அமல்​படுத்​தப்​பட்​டுள்​ளன. இவ்​வாறு முரளிதரன்​ தெரி​வித்​தார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here