கேரள தேவஸ்வம் துறை அமைச்சர் கே.முரளிதரன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சொந்தமான தங்கம் காணாமல் போனது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழுவின் (SIT) அறிக்கைக்காக காத்திருக்கிறோம்.
அந்த அறிக்கை கிடைத்தவுடன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் உடனடியாகத் தொடங்கும். கடவுள் சொத்தைக் கொள்ளையடித்த எவரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது.
எபோலா வைரஸ் தொற்று குறித்து கேரள மக்கள் அச்சப்படத் தேவையில்லை. இந்தியாவில் இதுவரை எபோலா பாதிப்பு எதுவும் கண்டறியப்படவில்லை.
வெளிநாடுகளில் இருந்து வருபவர்களைக் கண்காணிக்க விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் தீவிரப் பரிசோதனை முறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு முரளிதரன் தெரிவித்தார்.
