மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் (செப்.16) நிறைவு பெறுகிறது. இந்த சூழலில், கருத்துக் கணிப்புகளுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
தமிழகத்தில் மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9-ம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று (செப்டம்பர் 16) கடைசி நாளாகும்.
இந்நிலையில் மதுராந்தகம் தொகுதியில் வேட்பாளர்கள்...
முதல்வர் விஜய் குறித்து அவதூறான வகையில் பேசியதாகத் திமுக எம்.பி. ஆ.ராசா, முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது போலீஸார் தனித்தனி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அதற்கு பதில் அளித்த முதல்வர் விஜய், திமுக குறித்தும் மறைந்த அதன் முக்கிய தலைவர்கள் குறித்தும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். குறிப்பாக, சர்க்காரியா கமிஷன் அறிக்கை,...
அரசு மருத்துவமனைகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: அமைச்சர் அருண்ராஜ் தகவல்
admin - 0
அரசு மருத்துவமனைகளில் செவிலியர்களின் பற்றாக்குறை இருப்பதால் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.
சென்னை மருத்துவ கல்லூரியில் 192-வது மருத்துவ இளநிலை மாணவர் சேர்க்கை வரவேற்பு நிகழ்வு நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், 2026- 27-ம் கல்வியாண்டு இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு வெள்ளை அங்கி மற்றும் ஸ்டெதஸ்கோப் அணிவித்து வரவேற்றார்.
தொடர்ந்து, ரூ.23.40...
விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகளுக்காக கிளாம்பாக்கம் பேருந்து முனையம் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இணைப்பு பேருந்துகள் இயக்கத்தை போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆ.விஜய் தமிழன் பார்த்திபன் நேற்று காலையில் ஆய்வு செய்து, பொது மக்களிடம் பேருந்துகள் இயக்கம் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: அரசுப் போக்குவரத்துக் கழகங்கள்...
தவெகவில் பதவிக்கு பணம் கேட்பதாகக் கூறி, அக்கட்சியை சேர்ந்த இரு தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலான நிலையில், கடலாடி மேற்கு ஒன்றியச் செயலாளர் பதவிநீக்கம் செய்யப்பட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த வணிகர் சங்க நிர்வாகி பெத்தராஜ். தவெகவில் இணைந்துள்ள இவர், தனது உறவினர் ஒருவருக்கு அக்கட்சியில் சாயல்குடி நகரில் பதவி வாங்கித் தர 2 ஒன்றியச் செயலாளர்களை அணுகினார். கட்சியில் புதிதாக சேர்ந்தவருக்கு பொறுப்பு வழங்க பரிந்துரை...
நாடு முழுவதும் இன்று (செப்.14) விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், விநாயகப் பெருமான் அருளால் அனைத்து நற்செயல்களும் இனிதே நிறைவேறட்டும் என்று முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆலயங்களில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, பொது இடங்களில் பந்தல்களில் வைக்கப்பட்டுள் பல்வேறு விநாயகர் சிலைகள், வீடுகளில் வைக்கப்பட்டுள்ள களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் என மக்கள் வழிபட்டு வருகின்றனர். பூக்கள், பழங்கள், கொழுக்கட்டை, சுண்டல் உள்ளிட்டவற்றை...
லண்டனில் சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்துடன் ரூ.11,000 கோடி முதலீடு மற்றும் 7,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் விஜய் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. மேலும் சில நிறுவனங்களுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதுகுறித்து முதல்வர் விஜய் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இங்கிலாந்து, லண்டன் நகரில் இன்று (14.09.2026), சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் (Samvardhana Motherson International Ltd.,) நிறுவனம் அதன் ஐரோப்பா மற்றும்...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால், இன்று (15-09-2026) மாலை, நடைபெறவிருந்த “முப்பெரும் விழா” ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரை முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக தலைவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதன் காரணமாக, இன்று (15-09-2026) மாலை, சென்னை - அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறவிருந்த “முப்பெரும் விழா” ஒத்திவைக்கப்படுகிறது. விழா நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக...
“சமூகநீதி, சமத்துவம் தழைத்தோங்கிட உறுதியேற்போம்” – அண்ணா பிறந்தநாளில் முதல்வர் விஜய் ட்வீட்
admin - 0
“பேரறிஞர் அண்ணாவின் உயரிய முழக்கங்களை நெஞ்சில் ஏந்தி, சமூக நீதியும், சமத்துவமும், சகோதரத்துவமும் எங்கும் தழைத்தோங்கிடவும், தமிழின் பெருமையைக் காத்திடவும் இந்நாளில் உறுதியேற்போம்” என அவரது பிறந்தநாளில் தமிழக முதல்வர் விஜய் அவருக்கு புகழ் வணக்கம் செலுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை உருவாக்கி, ஏழை எளிய மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த முன்னாள் முதல்வர் அண்ணாவின்...
அமைச்சர் செங்கோட்டையனுக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கோபி செட்டிப்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட செங்கோட்டையன் வெற்றி பெற்றார். தற்போது வருவாய்த்துறை அமைச்சராக உள்ள செங்கோட்டையனின் வெற்றிக்கு எதிராக அதிமுக வேட்பாளர் பிரபு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதில், செங்கோட்டையனின் வேட்பு மனுவில் சான்றளித்துள்ள நோட்டரி வழக்கறிஞரின் உரிமம் காலாவதியாகிவிட்டதால், அந்த வேட்பு மனுவை ஏற்றதே...









