ரியோவின் நடிப்பில் உருவாகி உள்ள ‘மேடி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் இயக்கத்தில், ரியோ – சானியா ஐயப்பன் நடித்துள்ள படம் ‘மேடி’. இவர்களுடன் சிங்கம் புலி, ஆர்.ஜே.விஜய், அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கி ஒரேகட்டமாக நடந்து வந்தது. இந்த நிலையில் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இது குறித்து ரோல் டைம் ஸ்டூடியோஸ் அதன் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளது....
சரண்​ராஜ் செந்​தில்​கு​மார் இயக்​கத்​தில் உரு​வாகும் திரைப்​படம், ‘மண்டவெட்டி’. டஸ்​கர்ஸ் டென் பிக்​சர்ஸ் சார்​பில் அவரே தயாரித்துள்ள இப்​படம், உளவியல் ரீதி​யான பதற்​றம், நாட்​டுப்​புற நம்பிக்கைகள் மற்​றும் மனித உணர்​வு​களை ஒருங்​கிணைக்​கும் இருண்ட அமானுஷ்ய க்ரைம் த்ரில்​ல​ராக உரு​வாகி​யுள்​ளது. செஞ்சி எனப்​படும் சக்​தி​வாய்ந்த உள்​ளூர் தெய்​வத்​தைச் சுற்றியுள்ள மர்​ம​மான தொன்​மக் கதைகளை அடிப்​படை​யாகக் கொண்​டு, ஆழமான அச்​சத்​தை​யும் உணர்​வுப்​பூர்​வ​மான தாக்கத்தை​யும் ஏற்​படுத்​தும் வகை​யில் இப்​படத்​தின் கதை நகர்கிறது. பிர​காஷ் மனிதன் ஒளிப்​ப​திவு...
ஆனந்த் ஷங்​கர் இயக்​கத்​தில் விக்ரம் நடிக்​கும் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் சார்​பில் டி.ஜி.​தி​யாக​ராஜன் வழங்க, செந்​தில் தியாக​ராஜன், அர்​ஜுன் தியாக​ராஜன் தயாரிக்​கின்​றனர். இதில் எம்​.எஸ்​.​ பாஸ்​கர், ஊர்​வசி, சம்​யுக்தா ஹெக்​டே, ரியா ஷிபு, வி.டி.​வி. கணேஷ் உள்​ளிட்ட பலர் நடிக்​கின்​றனர். சந்​தோஷ் நாராயணன் இசையமைக்​கும் இப்​படத்​துக்கு ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்​ப​திவு செய்​கிறார். இந்​தப் படத்​துக்கு ‘பவர் ஹவுஸ்’ என்று தலைப்பு வைத்​துள்​ளனர். இந்​தப் படத்​தின் டைட்​டில் டீஸர் வரவேற்​பைப் பெற்​று​வரு​கிறது....
‘மண்டாடி’ படத்தைப் பார்த்து ரஜினிகாந்த் பாராட்டியதாக நடிகர் சூரி பதிவிட்டுள்ளார். மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரியின் நடிப்பில் உருவான ‘மண்டாடி’ படம் கடந்த செப்.10 அன்று வெளியானது. ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்திருக்கும் இப்படத்தில் சூரியுடன் மஹிமா நம்பியார், சுஹாஸ், சத்யராஜ், ரவீந்திரா விஜய், மிதுன், பால சரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.  தொடர் பாசிட்டிவ் விமர்சனங்களால் இப்படத்துக்கு நல்ல வரவேற்பு...
“ஒரு திரைப்​படத்​துக்​கான காட்​சிகளை வெட்​டிச் சேர்ப்​பது மட்​டும் படத்​தொகுப்பு அல்ல. ஒரு கதையை அதன் சுவைக் குறை​யாமல் சொல்​லும் முக்​கிய கலை​தான் அது” என்​கிறார் படத்​தொகுப்​பாளர் விஜய் வேலுக்குட்​டி. தமிழ் சினி​மா​வின் குறிப்​பிடத்​தக்க படத் தொகுப்​பாளர்களில் ஒரு​வ​ரான இவர், அஜித்​தின் ‘துணிவு’, ‘வலிமை’, ‘குட் பேட் அக்​லி’, விஷாலின் ‘மார்க் ஆண்​டனி’, கார்த்​தி​யின் ‘சர்​தார் 2’ உள்பட பல ஆக் ஷன் திரைப்​படங்​களில் பணி​யாற்​றிய​வர். “தொடர்ந்து ஆக் ஷன் படங்​களாகத்​தான் எனக்கு...
சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவகிவரும் ‘மூக்குத்தி அம்மன் 2: மகா சக்தி’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.  வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கிறார். ஏராளமான கிராபிக்ஸ் காட்சிகளுடன் உருவாகியுள்ள இப்படம், வரும் நவம்பர் 6-ஆம் தேதி தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  டீசரின் தொடக்கத்திலேயே ஆபத்தில் இருக்கும் அரச குடும்பத்துக் குழந்தை, அதை அழிக்கத் துடிக்கும் தீய சக்திகள்...
‘பிக்பாஸ் 10’ நிகழ்ச்சியில் தலைமைப் பண்பு குறித்து நடிகர் விஜய் சேதுபதி பேசிய விவகாரம் சர்ச்சையானதையடுத்து விஜய் டிவி நிர்வாகம் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. சமீபத்தில் ஒளிபரப்பான பிக்பாஸ் வார இறுதி எபிசோடில், போட்டியாளர்களின் செயல்பாடுகள் மற்றும் 'ஜனநாயக அறை' குறித்து தொகுப்பாளர் விஜய் சேதுபதி விவாதித்தார். அப்போது வீட்டின் தலைவராக இருந்த ஷாத்திகா என்ற போட்டியாளரின் செயல்பாட்டை விமர்சித்து பேசிய அவர், “உண்மையான தலைமைப் பண்பு என்றால் என்னவென்று தெரியாமல்,...
வி6 ஃபிலிம் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வெற்றிச்செழியன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தி கிராண்ட் மாஸ்டர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இயக்குநர்கள் ஹெச். வினோத், சீனு ராமசாமி மற்றும் மறைந்த இயக்குநர் ஜனநாதன் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய வெற்றிச்செழியன், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைமுறை, அவர்களின் வாழ்வாதாரப் போராட்டம் மற்றும் கனவுகளைப் பின்னணியாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. தூய்மைப் பணியாளராகப்...
‘அருமை தாய்மார்களே’ என பட்டிமன்ற மேடைகளிலும், ‘வாங்க பழகலாம்’ என சினிமாவிலும் இழுத்து மொழியும் தன் மதுரை தமிழால் தனி முத்திரைப் பதித்தவர் பட்டிமன்ற நடுவர், பேராசிரியர் சாலமன் பாப்பையா. அவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள் பலர் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அஞ்சலிக் குறிப்பில், ‘படித்தவரிடையே இலக்கியத் தரத்தில் இருந்த பட்டிமன்றத்தை பாமரர்களிடமும் ஜனரஞ்சகமாகக் கொண்டு சென்ற மாபெரும் தமிழ் ஆளுமை பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் ஆத்மா...
கவனமுடன் செயல்பட்டு சாதனையாளராக திகழ்பவர் அஜித்குமார் என்று ராதிகா புகழாரம் சூட்டியுள்ளார். நடிகரும், கார் ரேஸருமான அஜித்குமார் தனது படப்பிப்பு பணிகளுக்கு சற்று ஓய்வுகொடுத்துவிட்டு, கடந்த ஓர் ஆண்டாக மிசேலின் லீ மான் கோப்பை கார் பந்தையத்தில் பங்கேற்று வருகிறார். இந்த வாரம் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் அவர் லண்டனில் உள்ள சில்வர்ஸ்டோன் சர்கியூட்டில் நடைபெற இருக்கும் போட்டியில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அஜித் லண்டன் சென்றிருக்கிறார். இதனிடையே லண்டனில்...