பேரழிவை மையமாகக் கொண்ட கதைக் களங்களில், விறுவிறுப்பான சண்டைக் காட்சிகளையும் சாகசங்களையும் கலந்து, குழுக்களின் மோதலாக உருவாக்கப்படும் ஒரு பிரபலமான திரைப்பட வகை ‘அபோகலிப்டிக்’ (Apocalyptic) சினிமா. இதற்கு ஹாலிவுட்டில் சிறந்த எடுத்துக்காட்டு ‘மேட் மேக்ஸ்: பியூரி ரோடு’ (Mad Max: Fury Road). இந்த வகையைத் தனது ‘வேட்டுவம்’ படத்தின் மூலம் தமிழில் முயன்றுள்ளார் இயக்குநர் பா.ரஞ்சித். அதற்கான அறிமுகக் காணொளி வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் படக்குழுவினர் கலந்துகொள்ள,...
தனுஷ் நடிப்பில் தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் உருவாகும் ‘டி56’ படம் மானாமதுரையில் பூஜையுடன் இன்று தொடங்கியது. தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் அதன் சமூக வலைதள பக்கத்தில் இந்தத் தகவலைப் பகிர்ந்துள்ளது. அதில் ‘டி56’ இனிதே ஆரம்பம். படையல் விரைவில்’ என்று தெரிவித்து படக்குழுவினர் இருக்கும் புகைப்படத்தையும் பகிரந்துள்ளது. அந்தப் புகைப்படத்தில் தனுஷ், இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்துவுடன் எஸ்.ஜே.சூர்யா, பிரித்தி முகுந்தன், வடிவேலு, சாய் அபயங்கர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இப்படத்தின் மூலம் நடிகர்...
ரஜினியின் ‘ஜெயிலர் 2’ படத்தின் இரண்டாவது சிங்கிளான ‘ஒன் சன் ஒன் மூன்’ படலைப் படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். இந்தப் படத்தில் நடிப்பவர்களின் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் வீடியோக்களை படக்குழு கடந்த சில நாட்களாக வெளியிட்டு வந்த நிலையில் இரண்டு நாட்களாக, படத்தின் இரண்டாவது சிங்கிளான ‘ஒன் சன் ஒன் மூன்’ வெளியீடு குறித்து அறிவிப்பு வெளியிட்டு வந்தது. இந்த நிலையில் அந்த சிங்கிள் பாடலைப் படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.  அனிருத் இசையமைத்து...
நடிகர் தனுஷ், ராஜ்கு​மார் பெரிய​சாமி இயக்​கி​யுள்ள ‘ஓம்’ படத்தை முடித்​து​விட்​டார். இதில் மம்​மூட்​டி, நஸ்​ருதீன் ஷா, இந்திரன்​ஸ், சாய் பல்​ல​வி, ஸ்ரீலீலா உள்பட பலர் நடித்​துள்​ளனர். இப்​படம் அக். 16 -ல் வெளி​யாகும் என்று அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. இந்​நிலை​யில் ரஜினி​யின் ‘ஜெ​யிலர் 2’ திரைப்​படம் அக்​.15-ல் வெளி​யா​வ​தால், இதன் ரிலீஸ் தள்ளி வைக்​கப்பட்​டுள்​ளது. இதையடுத்து அவர் ‘லப்​பர் பந்​து’ இயக்​குநர் தமிழரசன் பச்சைமுத்து இயக்​கும் படத்​தில் நடிக்​கிறார். மதுரை பின்னணியில் உரு​வாகும்...
நடிகர் சண்முக பாண்டியன் ஒரே நேரத்​தில் இரண்டு படங்​களில் நடித்து வரு​கிறார். இந்​தப் படங்​களை கேப்​டன் சினி கிரியேஷன்ஸ் சார்​பில் எல்கே சுதீஷ் எம்​.பி தயாரித்து வரு​கிறார். இதில், மணிசேயோன் இயக்​கத்​தில் உரு​வாகி வரும் கிங் அண்ட் குயின்ஸ் படத்​தில் சண்​முக பாண்​டியனுடன் ஆதியா பிர​சாத், இளவரசு, பிரக​தி, தம்பி ராமை​யா, ரமேஷ் திலக், சுனில், சங்​கீ​தா, அஞ்​சலி நாயர், மைனா நந்​தினி, நிகிலா ஷங்​கர், மகிழ் திரு​மேனி...
கார்த்​திக் சுப்​பு​ராஜ் இயக்​கத்​தில் கீர்த்தி சுரேஷ் நடித்​துள்ள படமான ‘டோர​தி’ நாளை (செப்​.25) வெளி​யாகிறது. இப்​படத்​தின் செய்​தி​யாளர்​கள் சந்​திப்பு சென்​னை​யில் நடை​பெற்​றது. படக்​குழு​வினர் கலந்து கொண்​டனர். இதில் கீர்த்தி சுரேஷ் கூறும்​போது, “இந்​தப் படத்​தின் கதையைப் படித்​ததும் உடனே ஒப்​புக்​கொண்​டேன். இது போன்ற படத்​தில் நடிப்​பது பெரு​மை. இயக்​குநர் கார்த்​திக் சுப்​பு​ராஜிடம் இருந்து நிறைய விஷ​யங்​கள் கற்​றுக் கொண்​டேன். இளை​ய​ராஜா சார் இசை​யில் நடிப்​பேன் என்று கனவிலும் கூட நினைக்​க​வில்​லை....
யுவன் சங்கர் ராஜா இசையில் அடுத்து ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தை இயக்க இருப்பதாக இயக்குநர் ராம் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் இணை பிரியாமல் பயணிக்கும் ஒரு கூட்டணி இயக்குநர் ராம், யுவன் சங்கர் ராஜாவினுடையது. கடந்த 2007-ம் ஆண்டு வெளியான ‘கற்றது தமிழ்’ படத்தில் தொடங்கிய இவர்களின் பயணம் ‘தங்க மீன்கள்’, ‘தரமணி’, ‘பேரன்பு’, ‘பறந்து போ’ என நீண்டது. இவர்களின் கூட்டணியில் தற்போது உருவாகி இருக்கும் ‘ஏழு கடல் ஏழு மலை’...
‘சிக்மா’ படம் வெளியான பின்பு, அதன் மூலம் தனக்கான அடையாளத்தை உருவாக்கி, திரைத் துறையில் தன் பயணத்தை தொடர விரும்புவதாக தமிழக முதல்வர் விஜய்யின் மகனும், இயக்குநருமான ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார். ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ படம் அக்டோபர் 2-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில், தான் எப்படி அறியப்பட வேண்டும் என்று தனது விருப்பத்தை அவர் வெளிப்படுத்தி உள்ளார். ‘உங்களை...
‘‘சில்க் ஸ்மிதா ஒரு குடும்ப வாழ்க்கைக்கு ஆசைப்பட்டார். ஆனால், அவரது அந்த விருப்பம் கடைசி வரை நிறைவேறவே இல்லை’’ என தனது தோழியைப் பற்றி நடிகை குஷ்பு நினைவுகூர்ந்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில், ‘‘தனது கண்களையும் உடலையும் எந்த அளவுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என சில்க் ஸ்மிதா அறிந்தே இருந்தார். அதில் அவர் எச்சரிக்கையாகவும் இருந்தார். நான் அவரை ஒருபோதும் சில்க் என்றோ, ஸ்மிதா என்றோ...
கார்த்திக் சுப்பராஜிடம் இருந்து வந்திருக்கும் சிறந்த படைப்பு இது என்று ‘டோரதி’ படத்துக்கு நடிகர் தனுஷ் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் தனுஷ் பகிர்ந்துள்ள பதிவில், ‘ கார்த்திக் சுப்பராஜிடம் இருந்து வந்திருக்கும் மாஸ்டர் பீஸ் படம் ‘டோரதி’. துணிச்சலான மற்றும் நெஞ்சைத் தொடும் படைப்பு. இயல்பான அதேசமயம் மிகவும் தீவிரமான உணர்வுகளைக் கொண்டுள்ளது. அனைத்து நடிகர்களும் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளனர். இசைஞானி இளையராஜாவின் இசை உங்களை...