‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ படத்தை ஷஷாங்க் யெலெட்டி இயக்கியுள்ளார். இதில் ஃபஹத் பாசில் ஹீரோவாக நடித்துள்ளார். ஷோயிங் பிசினஸ் நிறுவனம் சார்பில் எஸ்.எஸ்.கார்த்திகேயா, ‘பாகுபலி’ படத்தைத் தயாரித்த ஆர்கா மீடியா வொர்க்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார். எஸ்.எஸ்.ராஜமவுலி வழங்கும் இப்படம் அக்.2-ல் வெளியாகிறது. இதன் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினருடன் விநியோகஸ்தர்
சக்திவேலன், நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் கலந்து கொண்டனர்.
இயக்குநர் எஸ். எஸ். ராஜமவுலி...
“நான் ‘டோரதி’ படம் பார்த்தேன். இந்த ஆண்டில் உலகில் யாருமே எடுக்காத உன்னதமான படம் இது. இந்திய திரைப்பட வரலாற்றில் சிறந்த 10 படங்களில் ஒன்றாக ‘டோரதி’ இருக்கும்” என இயக்குநர் மிஷ்கின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இளையராஜாவின் இசையில், கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘டோரதி’. இந்தப் படத்தை நெகிழ்ந்து பாராட்டி இயக்குநர் மிஷ்கின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘‘வணக்கம், என் பிறந்த...
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக இருந்து கைவிடப்பட்ட படம் குறித்த கங்கை அமரனின் பேச்சு தொடர்பான சர்ச்சைகளுக்கு வெங்கட் பிரபுவும், சிவகார்த்திகேயனும் பதில் அளித்துள்ளனர்.
சமீபத்தில் இயக்குநர் கங்கை அமரன், தனது மூத்த மகனும் இயக்குநருமான வெங்கட் பிரபுவின் வளர்ச்சி பற்றிய மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் நடிகரின் பெயரைக் குறிப்பிடாமல், தனது மகனுக்கு கால்ஷீட் கொடுத்திருந்த அந்த நடிகர், அவர் நடித்த ஒரு படம் வெற்றி...
விஜய் சேதுபதியின் நடிப்பில் 80-களின் பின்னணியில் உருவான ‘பத்தா’ முதல் அறிமுக இயக்குநர் ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா’ வரை பல்வேறு ஜானர்களில் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் படங்களின் பட்டியல் இது.
பத்தா: மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் பாலாஜி தரணிதரன் – விஜய் சேதுபதி கூட்டணியில் உருவான படம் ‘பத்தா’. 80-களின் பின்னணியில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் லிஜோமோல் ஜோஸ் நடித்திருக்கிறார். சாய் அபயங்கள்...
நிதி முறைகேடு புகார்: மும்பையில் நடிகை ரகுல் பிரீத் சிங் வீடு அலுவலகங்களில் வருமான வரி துறை சோதனை
admin - 0
நிதிமுறைகேடு புகாரில் தமிழ் நடிகை ரகுல் பிரீத் சிங், அவரது மாமனாரும் திரைப்படத் தயாரிப்பாளருமான வாசு பக்னானி மற்றும் ‘பனோரமா ஸ்டுடியோஸ்’ ஆகியவற்றுடன் தொடர்புடைய, மும்பையிலுள்ள 12 இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
திரைப்படத் தயாரிப்புக்கு நிதி அளிப்பதாகக் கூறி, வெளிநாடுகளுக்கு நிதி திசை திருப்பப்பட்டதாக எழும் புகார்களின் அடிப்படையில் புலனாய்வு அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். மும்பை வருமான வரித்துறையைச் சேர்ந்த பல குழுக்கள், சந்தேகத்துக்குரிய வெளிநாட்டுப்...
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 70-வது ஆண்டுப் பொதுக்குழுக்கூட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று நடைபெற்றது. இதில், சங்கத்தின் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர்கள் பூச்சி எஸ்.முருகன், கருணாஸ் மற்றும் நிர்வாகிகளும் பொதுக்குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். நடிகை லதாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. நாடக நடிகர்கள் 5 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. பொதுக்குழுவில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செயற்குழு கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கும், 2025–26 ஆண்டறிக்கை மற்றும்...
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 6-வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் சென்னை, வடபழனியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜ்மோகன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். கடந்த ஆண்டு அக்டோபர் முதல் இந்தாண்டு செப்டம்பர் வரை வெளியான குறிப்பிடத்தக்க மற்றும் வெற்றிகரமான தமிழ் திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
அவர்களுக்குக் கேடயம் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் குஷ்பு சுந்தர், சவுந்தர்யா ரஜினிகாந்த், விஜய் ஆண்டனி, கண்ணன் ரவி, தமிழ்...
சூர்யா நடித்து இந்தாண்டு வெளியான ‘கருப்பு’, ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ ஆகிய திரைப்படங்கள் வரவேற்பைப் பெற்றன. ஜித்து மாதவன் இயக்கத்தில் சீன் என்ற படத்தில் நடித்துள்ளார். தீபாவளிக்கு வெளியாக இருக்கும் இப்படத்துக்கு எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில், தனது நற்பணி இயக்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில், 25 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரம் ரசிகர்களைச் சந்தித்தார்.
தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளையும் சூர்யா சந்தித்துப் பேசினார். அப்போது அவர்...
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்து வரும் திரைப்படம், ‘புருஷன்’. இதில் தமன்னா, யோகிபாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கிறார்.
தமிழ், தெலுங்கில் உருவாகும் இப்படத்தை அவ்னி சினிமாக்ஸ், பென்ஸ் மீடியா இணைந்து தயாரிக்கிறது. ஆக் ஷன் கலந்த காமெடி படமான இதன் கிளைமாக்ஸ் காட்சிக்கான படப்பிடிப்பு தற்போது கோவாவில் நடைபெற்று வருகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக விஷால் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதுபற்றி விஷால் கூறும்போது, “பரபரப்பான...
எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. ‘புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்’ என்ற பெயரில் உருவாகும் இப்படத்தில் எம்.ஜி.ஆர் ஆக, ஜெ.எம்.பஷீர் நடிக்கிறார். இவர் ‘தேசிய தலைவர்’ என்ற படத்தில் முத்துராமலிங்கத் தேவராக நடித்தவர்.
தனது நடிப்பாலும் மனிதநேயத்தாலும் கோடிக்கணக்கான மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர், எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. என்ற பெயரில் கட்சித் தொடங்கி, தேர்தல் அரசியலில் களம் கண்டார். தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்று, தனது ஆட்சிக்காலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுத்தார்.
திரைப்படம், அரசியல், மக்கள்...









