ஒலி​யும் ஒளி​யும் இணைந்து பார்​வை​யாளர்களின் ஆழ்​மனதோடு நிகழ்த்​தும் உரை​யாடலே திரைப்​படங்​கள். ஒளிப்​ப​தி​வாளரின் கோண​மும், இசையமைப் பாளரின் ராக​மும் இணை​யும் புள்​ளி​யில் ஒரு காட்​சி​யின் ஆன்மா பிறக்​கிறது. நீண்ட ஷாட்​களும் இசை​யின் சுவாச​மும் ஒளிப்​ப​திவு ஒரு கதையைச் சொல்​லும் ‘உடல்’ என்​றால், பின்​னணி இசை மற்​றும் பாடல்​கள் அந்த உடலுக்கு உயிர் கொடுக்​கும் ‘ஆன்​மா’ போன்​றது. காட்​சி​யில் வெட்​டு​கள் குறை​வாக இருந்​து, கேமரா நீண்ட நேரம் ஒரு​வரை அல்​லது ஒரு சூழலைப் பின்​தொடரும்​போது...
சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள படம், ‘இடிமுழக்கம்’. காயத்ரி சங்கர், சரண்யா பொன்வண்ணன், அருள்தாஸ், சவுந்தரராஜா மற்றும் பலர் நடித்துள்ளனர். எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதியுள்ளார். என்.ஆர். ரகுநந்தன் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தை ஸ்கைமேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் 2-வது சிங்கிளான ‘கானா விளக்கு மயிலே’ என்ற பாடலை நடிகர்கள் ஆர்யா, விஜய் சேதுபதி இணைந்து வெளியிட்டனர். “இது தென் மாவட்டங்களை மையப்படுத்திய...
“சரியான முறையில் விமர்சனம் செய்தால் யாருக்கும் பாதிப்பு இல்லை. அதை விடுத்து தரமற்ற முறையில் செய்யப்படும் விமர்சனங்களால், தொடர்ந்து திரைத் துறை மற்றும் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவதால்தான் எதிர்ப்பு குரல் எழுப்பப்படுகிறது. திரையரங்குகளுக்கு வெளியே ரசிகர்கள் விமர்சனத்தை எங்களால் தடுக்க முடியாது என்றாலும், சட்ட ரீதியாக இந்த பிரச்சினையை அணுக உள்ளோம்” என தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். எதிர்மறை விமர்சனங்களால் ‘கங்குவா’ திரைப்படம் கடும்...
‘தோனி கபடி குழு', ‘கட்சிக்காரன் ' படங்களை இயக்கிய ப.ஐயப்பன், அடுத்து இயக்கியுள்ள படம், ‘உழவர் மகன்’. இதில் நாயகனாக கவுஷிக், நாயகிகளாக சிம்ரன் ராஜ், வின்சிட்டா ஜார்ஜ் நடித்துள்ளனர். மேலும் விஜித் சரவணன், யோகிராம், ரஞ்சன் குமார், சிவசேனாதி பதி, குமர வடிவேல் முக்கிய கதா பாத்திரங்களில் நடித்துள்ளனர். இதை சுபலட்சுமி ஃபிலிம்ஸ் சார்பாக கே.முருகன் தயாரித்துள்ளார். நா.ராசா, இணை தயாரிப்பு செய்கிறார். ஆக்‌ஷன் ரியாக்‌ஷன் சார்பில்...
‘மாநகரம்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், அதன் பின் ‘கைதி’, ’மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘லியோ’ படங்களை இயக்கினார். இப்போது ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தை இயக்கி வருகிறார். இதில் சத்யராஜ், ஆமிர்கான், நாகார்ஜுனா, உபேந்திரா உட்பட பலர் நடிக்கின்றனர். இந்நிலையில், ‘கூலி’ படத்தை முடித்ததும் அவர் ‘கைதி 2’ படத்தை இயக்குவார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்ட லோகேஷ் கனகராஜ்,...
திரை​யில் காணும் ஒவ்​வொரு ஃபிரே​முக்​கும் பின்​னால் இயக்​குநரின் கற்​பனை, ஒளிப்​ப​தி​வாளரின் பார்​வை, கலை இயக்​குநரின் வடிவ​மைப்பு ஒன்​றிணைந்து செயல்​படு​கின்​றன. ஒரு கதையை வார்த்​தைகளால் மட்​டுமல்​லாமல், ஒளி, நிறம், அமைப்​பு, பின்​னணி மற்​றும் இடவெளி ஆகிய​வற்​றின் மூலம் பார்​வை​யாளரின் மனதில் பதிய வைப்​பதே இவர்​களது பணி. திரைக்​குப் பின்: ஒளிப்​ப​தி​வாளர், கலை இயக்​குநரின் கூட்​டுப்​படைப்பு ஒளிப்​ப​தி​வாளர் கேம​ரா, லென்​ஸ், ஒளியமைப்பு மற்​றும் காட்​சி​யின் உணர்​வுத் தன்​மையை நிர்​ண​யிக்​கிறார். கலை இயக்​குநர் கேம​ரா​வின் முன்​னால் இருக்​கும்...
நடிகை தேவயானி முதன்முறையாகத் தயாரித்து, இயக்கியுள்ள குறும்படம், ‘கைக்குட்டை ராணி’. இதற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். ராஜன் மிர்யாலா ஒளிப்பதிவு செய்துள்ள இக்குறும்படத்துக்கு பி.லெனின் படத்தொகுப்பு செய்துள்ளார். நிஹாரிகா வி.கே. மற்றும் நவீன்.என் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 20 நிமிடங்கள் ஓடும் இக்குறும்படம் குழந்தைகளின் உணர்வுகளைப் பேசுகிறது. தாயை இழந்த ஒரு பெண் குழந்தை, தந்தை வெளியூரில் பணிபுரியும் சூழலில் எத்தகைய சிக்கல்களைச் சந்திக்கிறது என்பதை உணர்வுப்பூர்வமாக இப்படம் வெளிப்படுத்துகிறது....
மோகன்லால் நடித்துள்ள ‘எம்புரான்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஹாலிவுட் நடிகர் ஜெரோம் ஃப்ளின். பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘லூசிஃபர்’. இதன் 2-ம் பாகமாக ‘எல்2: எம்புரான்’ உருவாகியுள்ளது. இதில் பிருத்விராஜ், டொவினோ தாமஸ், மஞ்சு வாரியர், சுராஜ் வெஞ்சரமூடு, சானியா ஐயப்பன் உள்ளிட்ட பலர் மோகன்லால் உடன் நடித்திருக்கிறார்கள். லைகா நிறுவனம் மற்றும் ஆசிர்வாத் சினிமாஸ் இணைந்து இப்படத்தினை தயாரித்திருக்கிறார்கள். இப்படத்தில்...
விஜய்க்கு ‘பகவந்த் கேசரி’ மிகவும் பிடித்த படம் என்று அதன் இயக்குநர் அனில் ரவிபுடி தெரிவித்துள்ளார். ’பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக் தான் ‘ஜனநாயகன்’ என்பது ட்ரெய்லர் வெளியான உடனே உறுதியாகிவிட்டது. இதனால் பலரும் அப்படத்தின் காட்சிகளை வைத்து கருத்து தெரிவித்து வந்தார்கள். மேலும், ‘பகவந்த் கேசரி’ இயக்குநர் அனில் ரவிபுடி இது தொடர்பாக கருத்து தெரிவிக்காமல் இருந்தார். தற்போது அனில் ரவிபுடி அளித்த பேட்டியொன்றில் ‘ஜனநாயகன்’ தொடர்பாக, “விஜய்க்கு ‘பகவந்த்...
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன் சென்னையில் நள்ளிரவில் நிகழ்ந்த கார் விபத்தில் லேசான காயங்களுடன் தப்பினார். இந்த விபத்து குறித்து அவரது சகோதரி கதீஜா விளக்கம் அளித்துள்ளார். கிண்டி ஒலிம்பியா சிக்னல் அருகே இன்று அதிகாலை 3:30 மணியளவில் அமீன் தனது நண்பருடன் சொகுசு காரில் சென்று கொண்டிருந்தபோது, பக்கவாட்டு சாலையிலிருந்து வந்த மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் அமீன் மற்றும் அவரது நண்பருக்கு லேசான காயங்கள்...