யோகிபாபு, லட்சுமி மேனன், காளி வெங்கட், குழந்தை நட்சத்திரம் சதுர்த்திகா கணேஷ்மூர்த்தி உட்பட பலர் நடித்துள்ள படம், ‘மலை’. அறிமுக இயக்குநர் முருகேஷ் இயக்கியுள்ள இந்தப் படத்தை லெமன் லீப் கிரியேஷன்ஸ் சார்பில் ஆர்.கணேஷ்மூர்த்தி , சவுந்தர்யா கணேஷ்மூர்த்தி தயாரித்துள்ளனர். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.
“மனித வாழ்வு இயற்கையோடு இணைந்தது. ஆனால், மனித பேராசை இயற்கையை மொத்தமாக அழிவின் விளிம்பில் கொண்டு வந்து இன்று நிறுத்தியிருக்கிறது. தமிழக மலைக்கிராமம் ஒன்றில் நடக்கும் கதையான இதில் மனிதனின் சுயநலப் பசிக்கு இயற்கையின் பதில் என்ன? என்பதை பேசியிருக்கிறோம்” என்கிறது படக்குழு. செப்டம்பர் மாதம் படம் வெளியாக இருக்கிறது.