குமரி மாவட்டம் பேச்சிப்பாறை, கோதையாறு மலைப்பகுதிகளில் கடந்த 21ஆம் தேதி அதிகாலையில் பெய்த கனமழையால் காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் மோதிரமலையில் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக தரை பாலம் முழுமையாக சேதம் அடைத்தது.
இதனால் மலையோர கிராமங்களுக்கு பஸ் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது. மலை கிராம மாணவ மாணவிகள் பெரிதும் பாதிப்படைந்தனர். இதற்கு இடையே பாரத்தை சீரமைக்க மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில், மாவட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் உடனடியாக சீரமைப்பு பணிகள் நடைபெற்றன.
மூன்று நாட்களில் மீண்டும் தற்காலிக பாலம் அமைக்கப்பட்டது. இதை எடுத்து ஆற்றின் மறுகறையில் இரண்டு நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்து ஒன்று பாலத்தின் வழியாக மீண்டும் பணி மனைக்கு கொண்டு செல்லப்பட்டது. தற்காலிக பாலம் சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து இன்று முதல் பஸ் போக்குவரத்து முழுமையாக தொடங்கும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.