குமரி: மாமியாரை மிரட்டிய மருமகன் மீது வழக்கு

0
49

மணவாளக்குறிச்சியைச் சேர்ந்த பிரேமா (56) என்பவரின் மகள் மஞ்சுவை, ரமேஷ் 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். மது அருந்திவிட்டு மனைவியுடன் தகராறு செய்ததால், மஞ்சு குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று, மனைவியை அழைத்துச் செல்ல வந்த ரமேஷ், மாமியார் பிரேமாவிடம் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து பிரேமா மண்டைக்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here