3,000 கி.மீ. தூரத்தில் இருந்து இந்திய மருத்துவர் அறுவை கிசிச்சை

0
17

தெலங்​கானா மாநில தலைநகர் ஹைத​ரா​பாத்தை சேர்ந்த சிறுநீர க​வியல் துறை மருத்​து​வர் சையது முகமது கவுஸ், சீனா​வின் வூஹான் நகரில் உள்ள டோங்ஜி மருத்​து​வ​மனைக்கு சென்று ரோபோ அறுவை சிகிச்​சை​யில் சிறப்பு பயிற்​சிகளைப் பெற்​றார்.

இந்நிலையில், வூஹானில் இருந்து 3,000 கி.மீ. தொலை​வில் உள்ள ஹைத​ரா​பாத் மருத்​து​வ​மனை​யில் உள்ள நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்​தார். இந்த அறுவை சிகிச்சை 90 நிமிடங்​கள் நீடித்​தது.

ஹைத​ரா​பாத் மருத்​து​வ​மனை​யில் நோயாளிக்கு மயக்க மருந்து அளிக்​கப்​பட்​டு, சிறப்பு ரோபோ கருவி​கள் தயார் நிலை​யில் வைக்​கப்​பட்டு இருந்​தன. அதே​நேரம் வூஹானில் உள்ள மருத்​து​வ​மனை​யில் இருந்த மருத்​து​வர் சையது முகமது கவுஸ், ரிமோட் கன்ட்​ரோல் மூலம் ஹைத​ரா​பாத்​தில் உள்ள ரோபோ கருவி​களை இயக்கி அறுவை சிகிச்​சையை மேற்​கொண்​டார்.

சீன மருத்துவ குழுவினருடன் சையது முகமது கவுஸ்.

5ஜி தொழில்​நுட்​பம், 3டி கேம​ராக்​கள் மற்​றும் செயற்​கைக்​கோள் இணைப்பு உதவி​யுடன் சீனா​வில் இருந்து ஹைத​ரா​பாத்​தில் உள்ள ரோபோ கருவி​கள் இயக்​கப்​பட்​டன. இந்​திய மருத்​து​வத் துறை​யில் இது புதிய முயற்சி ஆகும் என்று மருத்துவர்கள்​ மகிழ்ச்சி தெரி​வித்​து உள்​ளனர்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here